பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304

புறநானூறு செய்யுளும் செய்திகளும்


295. ஒளவையார்

கடல் போல் பரந்த பாசறை அடுத்த போர்க் களத்தில் தன் படைத் தொகுதியை முன்னால் அனுப்பித் தானும் அதில் முன்னணியில் நின்றான். வருபடை விலக்கியும், தன் இதர படை வீரருடன் சென்று பொருதான். அவன் அப்போர் நடுவே சிதைக்கப்பட்டான்.

வீரமரணம் அடைந்த தன் மகனைக் கண்ட தாய் அவள் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. வற்றிக் கிடந்த அவள் முலை பால் சொரிந்தது; தாய்மை பூரிப்புக் கொண்டது; பேருவகை அடைந்தாள்.

கடல் கிளர்ந்தன்ன கட்டுர் நாப்பண், வெந்து வாய் மடித்த வேல் தலைப் பெயரித், தோடு உகைத்து எழுதரூஉத், துரந்து எறி ஞாட்பின், வரு படை போழ்ந்து வாய்ப் பட விலங்கி, இடைப் படை அழுவத்துச் சிதைந்து வேறாகிய, சிறப்புடையாளன் மாண்பு கண்டருளி, வாடு முலை ஊறிச் சுரந்தன. ஓடாப் பூட்கை விடலை தாய்க்கே.

திணை - அது துறை - உவகைக் கலுழ்ச்சி

ஒளவையார் பாடியது

296. வெள்ளை மாளர்

பகை வேந்தனைத் தாக்கி உயிரைப் போக்கி அது முடிந்தபின்பே திரும்புவது என்று போர் செய்கிறான் போலும்; அதனால் தான் நெடுந்தகையாகிய வீரனின் தேர் காலந்தாழ்த்தி வீடு திரும்புகிறது.

வேம்பின் ஒண் தளிர் பறித்து வருவோரும், காஞ்சிப் பண் பாடுவோரும் ஆக விளங்குகின்றனர். நெய்யுடைக் கையராகி வெண் சிறு கடுகு தூவுகின்றனர். எல்லா வீட்டினரும் கல் என்று ஒலி எழுப்புகின்றனர்.

வேம்பு சினை ஒடிப்பவும், காஞ்சி பாடவும்,

நெய்யுடைக் கையர் ஐயவி புகைப்பவும்,