பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

305



எல்லா மனையும் கல்லென்றவ்வே: வேந்து உடன்று எறிவான்கொல்லோநெடிது வந்தன்றால் நெடுந்தகை தேரே.

திணை - வாகை, துறை - ஏறாண் முல்லை.

வெள்ளைமாளர் பாடியது.

297. உண்டாட்டு

எருமையின் கொம்புகளைப் போல் விளையும் நெற்றுகளையுடைய பயிறு விளையும் கரம்பு நிலம்; மற்றும் கன்றுகளுடன் மரைப்பசு துயில் கொள்ளும் சிறுர் அவனுக்குப் புரவு நிலமாகத் தரவேண்டாம்; இது சிறப்புடையது அன்று.

கள் அவனுக்கு மிகுதியாகத் தந்து நீர்த்துறை அடுத்துள்ள புதர்களில் கம்புள்கோழி முட்டையிடும் மருத நிலத்து ஊர்களைத் தருவதே அவனுக்குச் சிறப்புச் செய்வது ஆகும். மடலை உடைய பனை மரம் போல் நெடுவேல் பாய்ந்து விழுப்புண் பட்ட மார்பினன் அவன்.

பெரு நீர் மேவல் தண்ணடை எருமை இரு மருப்பு உறழும் நெடு மாண் நெற்றின் பைம் பயறு உதிர்த்த கோதின் கோல் அணைக், கன்றுடை மரையாத் துஞ்சும் சீறுர்க் கோள் இவண் வேண்டேம், புரவே; நார் அரி நனை முதிர் சாடி நறவின் வாழ்த்தித், துறை நனி கெழீஇக் கம்புள் ஈனும் தண்ணடை பெறுதலும் உரித்தே - வைந் நுதி நெடு வேல் பாய்ந்த மார்பின், மடல் வன் போந்தையின், நிற்குமோர்க்கே

திணை - வெட்சி; துறை - உண்டாட்டு.

298. ஆவியார்

வேந்தன் இதற்கு முன் மகிழ்வு தரும் உயரிய மதுக்கலங்கலை எமக்குத் தருவான்; தான் எளிய தேறல் மதுவை உண்பான். போர்க்குச் செல்க என்று எம்மை ஏவுவான்.