பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



இன்று அவன் மடிந்து சோம்பி இருக்கிறான். போர் இல்லாமல் இருப்பது எங்களுக்கு மகிழ்வு தருவதாக இல்லை. எப்பொழுது மறுபடியும் கள்ளைத் தந்து களத்துக்கு அனுப்புவானோ தெரியவில்லை. “பகைவர் எயிலை முற்றுக, நீ முந்திச் செல்க’ என்று கூறாமல் இருக்கிறான். இது வியப்பாக உள்ளது.

எமக்கே கலங்கல் தருமே தானே தேறல் உண்ணும்மன்னே நன்றும் இன்னான் மன்ற வேந்தே, இனியேநேரார் ஆர் எயில் முற்றி, வாய் மடித்து உரறி ‘நீ முந்து என்னானே.

திணை - கரந்தை துறை - நெடுமொழி. ஆவியார் பாடியது.

299. பொன் முடியார்

பருத்தி மரத்தை வேலியாக உடைய சீறுர் மன்னனின் குதிரை உழுந்தின் சக்கையைத் தின்று தளர்ந்துள்ளது; எனினும் அது கடலைப் பிளந்து செல்லும் தோணி போல எதிரிகளின் படை முகம் சென்று பிளவுபடுத்துகிறது.

வளம்மிக்க மருத நிலத்துப் பேரரசர்களின் கொழுத்து உண்டு செழித்து வளர்ந்த குதிரைகள் முருகன் திருக்கோயிலில் கலங்களைத் தொடுவதற்கு இல்லாமல் மாதவிலக்குப் பெற்ற மகளிரைப் போல் போர்க்கு அஞ்சி விலகி நிற்கின்றன.

பருத்தி வேலிச் சீறுர் மன்னன் உழுத்ததர் உண்ட ஒய் நடைப் புரவி, கடல் மண்டு தோணியின், படை முகம் போழநெய்ம்மிதி அருந்திய, கொய் சுவல் எருத்தின், தண்ணடை மன்னர், தாருடைப் புரவி, அணங்குடை முருகன் கோட்டத்துக் கலம் தொடா மகளிரின், இகழ்ந்து நின்றவ்வே.

திணை - நொச்சி; துறை - குதிரை மறம்.

பொன்முடியார் பாடியது.