பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

307



300. அரிசில் கிழார்

கேடயத்தைக் கொடு கேடயத்தைக் கொடு என்று கேட்டுக் கொண்டிருக்கிறாய். கேடயத்தோடு துறுகல் கொண்டு உன்னைக் காத்துக் கொண்டாலும் நீ உயிருடன் திரும்ப மாட்டாய்.

நேற்று நீ வேல் எறிந்து கொன்றாயே அவன் தம்பி இவன். அகலில் பெய்த குன்றி மணிபோலச் சுழலும் கண்ணனாய்ப் பேரூரில் காய்ச்சிய கள்ளைக் குடிப்பதற்கு வீடு ஒன்றில் புகுந்து ஒரு கலயத்தைத் தேடுவதுபோல உன்னைத் தேடுகிறான். நீ உயிர் தப்புவது அரிது.

தோல் தா; தோல் தா என்றி; தோலொடு துறுகல் மறையினும் உய்குவை போலாய்: நெருநல் எல்லை நீ எறிந்தோன் தம்பி, அகல் பெய் குன்றியின் சுழலும் கண்ணன், பேர் ஊர் அட்ட கள்ளிற்கு ஒர் இல் கோயில் தேருமால் நின்னே.

திணை - தும்பை, துறை - தானை மறம்.

அரிசில் கிழார் பாடியது.

301. ஆவூர் மூலங்கிழார்

குமரிப் பெண்ணின் கூந்தலைப் போல நெருங்குவதற்கு

அரிய வேலிகளை உடைய பாசறையில் பதுங்கி உள்ள படை வீரர்களே! நீங்கள் உம் அரசனைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். உம் களிறுகளைக் காத்துக் கொள்ளுங்கள். எத்தனை நாள் இந்தப் போர் நீடிப்பது; ஆயினும் தம்மை எதிர்க்காதவரை இவன் எதிர் சென்று தாக்குதல் செய்யான். அவன் கருதுவது யாது?

படை வன்மை உமக்கு உள்ளது என்று தாக்குதல் ஒழிவீர்! அவனை எதிர்க்க நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தாலும் வெல்ல இயலாது.

அவன் நீள் நெறி கடந்து குதிரையில் வந்து தன் பாசறையுள் புகுந்துள்ளான். ஒர் இரவு அது கழிந்தது; அவன் உங்களைச் சந்திப்பான்.