பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308

புறநானூறு செய்யுளும் செய்திகளும்


நீங்கள் அவனுக்கு ஒரு பொருட்டு அன்று; உம் அரசனை

அனுப்பி வைக்கவும். அவனே இவனுக்கு நேர் எதிரி;

அப்பொழுதுதான் இவன் போர் செய்வான்.

பல் சான்றீரே! பல் சான்றீரே! குமரி மகளிர் கூந்தல் புரைய, அமரின் இட்ட அரு முள் வேலிக் கல்லென் பாசறைப் பல் சான்றீரே! முரசு முழங்கு தானை நும் அரசும் ஒம்புமின், ஒளிறு எந்து மருப்பின் நும் களிறும் போற்றுமின், எனை நாள் தங்கும் நும் போரே, அனை நாள் எறியார் எறிதல் யாவனது? எறிந்தோர் எதிர் சென்று எறிதலும் செல்லான்; அதனால் அறிந்தோர் யார், அவன் கண்ணிய பொருளே? ‘பலம் என்று இகழ்தல் ஓம்புமின், உதுக் காண் நிலன் அளப்பன்ன நில்லாக் குறு நெறி, வண் பரிப் புரவிப் பண்பு பாராட்டி, எல்லிடைப் படர்தந்தோனே கல்லென வேந்து ஊர் யானைக்கு அல்லது, ஏந்துவன் போலான், தன் இலங்கு இலை வேலே.

திணையும் துறையும் அவை, ஆவூர் மூலங் கிழார் பாடியது.

302. வெறியாடிய காமக் கண்ணியார்

இப்படைத் தலைவன் தலைமை தாங்க இவனுக்குத் துணையாகச் சென்று போர் செய்த வீரர்களின் குதிரைகள் வளைத்துவிடப்பட்ட மூங்கில் நிமிர்ந்து தாவுவதைப் போலத் தாவிச் சென்று போர் செய்தன. வெற்றி விளைவித்தனர்.

விறலியர் பூ பெற்றனர்; யாழிசைப் பாணர்கள் கரம்பை நிலம் கொண்ட சிற்றுர்களைப் பரிசிலாகப் பெற்றனர்.

கொடைமிக்க இப்படைத் தலைவன் இத்தகைய போர்களில் எறிந்து வீழ்த்திய களிறுகளை எண்ணினால் வானத்து மீன்களும்

பொழியும் மழைத்துளிகளும் நிகர் ஆகா. அவற்றினும் இவை மிகுதிப்பட்டன.