பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

309



வெடி வேய் கொள்வது போல ஒடித், தாவுபு உகளும், மாவே, பூவே, விளங்குஇழை மகளிர் கூந்தற் கொண்ட, நரந்தப் பல் காழ்க் கோதை சுற்றிய ஐது அமை பாணி வணர் கோட்டுச் சீறியாழ்க்

கை வார் நரம்பின் பாணர்க்கு ஒக்கிய, நிரம்பா இயல்பின் கரம்பைச் சீறுர்; நோக்கினர்ச் செகுக்கும் காளை ஊக்கி, வேலின் அட்ட களிறு பெயர்த்து எண்ணின், விண் இவர் விசும்பின் மீனும், தண் பெயல் உறையும், உறை ஆற்றாவே.

திணை - அது துறை - குதிரை மறம். வெறி பாடிய காமக்கண்ணியார் பாடியது.

303. எருமை வெளியனார்

நேற்று நடந்த போரில் பகைவேந்தனை நோக்கிக் கடலைப் பிளந்து செல்லும் தோணியைப் போல் சென்று பெண் யானைகள் வெட்கித் தனிமையுற்று வருந்தக் களிறுகளைத் தாக்கிக் கொன்றேன். அதனால் பகைகொண்டு திருப்பித் தாக்க என்னை எதிர்க்க இன்று கடுஞ் செலவினை உடைய குதிரை மீது எதிரிப் படைஞன் ஒருவன் வேலைச் சுழற்றி ஏந்தி என் மார்பில் ஏவிப் புண்படுத்த வருகின்றான்; அவனை யான் எதிர்ப்பேன்.

நிலம் பிறக்கிடுவது போலக் குளம்பு குடையூஉ, உள்ளம் அழிக்கும் கொட்பின் மான்மேல் எள்ளுநர்ச் செகுக்கும் காளை கூர்த்த வெந் திறல் எஃகம் நெஞ்சு வடு விளைப்ப ஆட்டிக் காணிய வருமே - நெருநை, உரைசால் சிறப்பின் வேந்தர் முன்னர்க், கரை பொரு முந்நீர்த் திமிலின் போழ்ந்து, அவர் கயந்தலை மடப் பிடி புலம்ப, இலங்கு மருப்பு யானை எறிந்த எற்கே,

திணையும் துறையும் அவை,

எருமை வெளியனார் பாடியது.