பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



304. அரிசில் கிழார்

‘ஏவலனே! குழை அணிந்த மகளிர் உனக்கு மாலை சூட்டிப் பின் அவர்கள் வார்த்துத் தரக் குளிர் நீங்கக் கள் பருகுக; குதிரையை அலங்கரித்து வைக்க’ என்று ஏவலர்க்கு ஆணையிட்டு உள்ளான்.

தான் உணவும் உண்ணாமல் போருக்குக் குதிரைகளை ஆராய்ந்து கொண்டிருக்கிறான்.

‘எம் முன்னைவனைக் கொன்றவனையும் அவன் தம்பியையும் ஒருசேர நாளைக்கு அமரில் கொல்வேன்’ என்று அவர்பால் சூள் உரைத்து இருக்கிறான்.

இந்தச் செய்தியை ஒற்றர் அறிந்து வந்து கூற அதனைக் கேட்டுப் பகை வேந்தனின் வீரர்கள் பாசறையில் ‘அவன் சொல் பிழையான்; செயல்படுத்துவான்’ என்று கூறியவராய் நடுங்குகின்றனர்.

கொடுங் குழை மகளிர் கோதை சூட்டி, நடுங்கு பனிக் களைஇயர் நார் அரி பருகி, வளி தொழில் ஒழிக்கும் வண் பரிப் புரவி பண்ணற்கு விரைதி, நீயே நெருநை, எம்முன் தப்பியோன் தம்பியொடு, ஒராங்கு நாளைச் செய்குவென் அமர் எனக் கூறிப், புன் வயிறு அருத்தலும் செல்லான், பல் மான் கடவும் என்ப, பெரிதே; அது கேட்டு, வலம் படு முரசின் வெல் போர் வேந்தன் இலங்கு இரும் பாசறை நடுங்கின்று - ‘இரண்டு ஆகாது அவன் கூறியது. எனவே.

திணையும் துறையும் அவை.

அரிசில் கிழார் பாடியது.

305. மதுரை வேளாசான்

வயலைக் கொடிபோல வாடிய இடுப்பினை உடைய பார்ப்பன இளைஞன் இரவின்கண் மெல்ல இயங்கும் ஊர்தியில்