பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

311


வந்து நில்லாது நேரே உள்ளே சென்று கொல்லிய சொற்கள்

சிலவே ஆகும்.

அதன் பயனாக ஏணியையும், சீப்பையும் நீக்கிப் போர் செய்ய நிறுத்தப்பட்ட யானைகளின் மணிகளையும் பகை அரசன் களைந்து விட்டான்.

வயலைக் கொடியின் வாடிய மருங்குல், உயவல் ஊர்திப் பயலைப் பார்ப்பான் எல்லி வந்து நில்லாது புக்குச் சொல்லிய சொல்லோ சிலவே, அதற்கே ஏணியும் சீப்பும் மாற்றி, மாண் வினை யானையும் மணி களைந்தனவே.

திணை - வாகை துறை - பார்ப்பன வாகை,

மதுரை வேளாசான் பாடியது.

306. அள்ளுர் நன்முல்லையார்

யானைகள் படிந்து நீரைக் கலக்குகின்றன. குறைந்த நீர் உடையது. அத்தகைய நீர் நிலைகளையும் கழல் கொடியால் அமைந்த முள்வேலிகளையும் உடையது; அவ் அழகிய சிற்றுார். இதில் முன்னோருக்கு என்று வைத்த நடுகல்லை வீட்டுக் கிழத்தி தொழுது வழிபடுகின்றனள். அவள் வழிபாடு இது.

‘நாளும் விருந்தினர் வருக என்றும், ‘என் தலைவன் வேந்தனோடு சென்று பல போர்களைச் சந்திக்க என்றும் கூறி வழிபடுகிறாள்.

களிறு பொரக் கலங்கு, கழல் முள் வேலி,

அரிது உண் கூவல், அம் குடிச் சீறுர்

ஒலி மென் கூந்தல் ஒள் நுதல் அரிவை

நடுகல் கை தொழுது பரவும், ஒ டியாது:

விருந்து எதிர் பெறுகதில் யானே என்ஐயும்

ஒ . . . . வேந்னொடு

நாடுதரு விழுப் பகை எய்துக எனவே.

திணை - அது துறை மூதில் முல்லை. அள்ளுர் நன்முல்லையார் பாடியது.