பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



307. களிற்றுடன் நிலை

அதோ ஒரு புதிய வீரன். அணில் வால் போல் காட்சி அளிக்கும் ஊகம் புல்லின் பூவைச் சூடிப் பொலிவுற விளங்குகிறான். முடம்பட்ட எருதினை உமணர்தடம்பட்ட வழியில் ஒரு மூலையில் விட்டுச் செல்ல உணவு இன்றித் தவிக்கிறது. அது தன் சுற்றிலும் உள்ள புல்லைப் பற்றி எட்டிய மட்டும் கறித்துத் தின்கிறது. அதுபோல இவ்வீரன் களிறு வீழ்த்தி அதனோடு விழுந்தவன் தன் சுற்றிலும் உள்ளவரைச்சாய்த்து வெட்டி வீழ்த்துகிறான். இவன் வீரம் விய்க்கத்தக்கது.

இவ்விளைய வீரன் ஆற்றும் போரைக் கண்டு இதுவல்லவா வீரம். இவனைப் போல் யானும் பொருவேன்; அதனால் புலவர் பாடும் புகழும் பெறுவேன்; சரித்திரம் செய்வேன் என்று கூறி உயிர்மேல் பற்று அற்றுக் களத்தில் வேந்தனும் போரிட்டான். களிறைச் சாய்த்துத் தானும் உடன் விழுந்தான். அவன் என்ன ஆனான்? அவன் நிலை யாது; எங்களுக்கு எல்லாம் பற்றாக இருந்த எம் தலைவன் எங்கே உள்ளானோ அறியேன்.

ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்கொல்லோ? குன்றத்து அன்ன களிற்றொடு பட்டோன்; வம்பலன் போலத் தோன்றும், உதுக்காண்! வேணல் வரி அணல் வாலத்து அன்ன, கான ஊகின் கழன்று உகு முது வீ அரியல் வான் குழல் சுரியல் தங்க, நீரும் புல்லும் ஈயாது, உமணர் யாரும் இல் ஒரு சிறை முடத்தொடு துறந்த வாழா வான் பகடு ஏய்ப்பத், தெறுவர் பேர் உயிர் கொள்ளும்மாதோ, அது கண்டு, வெஞ் சின யானை வேந்தனும், இக் களத்து, எஞ்சலின் சிறந்தது பிறிது ஒன்று இல் எனப், பண் கொளற்கு அருமை நோக்கி, நெஞ்சு அற வீழ்ந்த புரைமையோனே.

திணை - தும்பை, துறை - களிற்றுடனிலை.