பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

313



308. கோவூர் கிழார்

சைவழங்கும் பாணனே இந்தப் புதுமையை நீ கேட்பாயாக! - ழங்கு து

சீறுர் வாழும் மன்னன் ஏவிய வேல் பேரூர் மன்னனின் யானையின் முகத்தில் சென்று பாய்ந்தது.

அவ்வாறே அப்பேரூர் மன்னன் திரும்ப ஏவிய வேல் இச் சிற்றுர் மன்னனின் மார்பில் பாய்ந்தது; அவன் மார்பைக் கிழித்தது.

அவன் தன் மார்பில் பதிந்த வேலைப் பிடுங்கி அவ்யானையை நோக்கி ஏவினான். அவ்வளவுதான் அதன் பெண் யானை நாணம் அடையப் பேரரசன் யானைகள் எல்லாம் அஞ்சிப் புறங்கொடுத்தன.

பொன் வார்ந்தன்ன புரி அடங்கு நரம்பின், மின் நேர் பச்சை, மிஞற்றுக் குரற் சீறியாழ் நன்மை நிறைந்த நய வரு பாண! சீறுர் மன்னன் சிறியிலை எஃகம் வேந்து ஊர் யானை ஏந்து முகத்ததுவே: வேந்து உடன்று எறிந்த வேலே, என்னை சார்ந்து ஆர் அகலம் உளம் கழிந்தன்றே: உளம் கழி சுடர்ப் படை ஏந்தி, நம் பெருவிறல் ஒச்சினன் துரந்த காலை, மற்றவன் புன் தலை மடப் பிடி நானக், குஞ்சரம் எல்லாம் புறக்கொடுத்தனவே.

திணை - வகை துறை - மூதில் முல்லை.

கோவூர் கிழார் பாடியது.

309. மதுரை இளங்கண்ணிக் கெளசிகனார்

இரும்பு வேல் கொண்டு அதன் முனை மழுங்கப் பகைவர் களைக் கொன்று வெற்றி பெறுவது யாவரும் ஆற்றக் கூடியது.

என் தலைவன் அவன் பெயரைச் சொன்னாலே நடுங்குவர்

எதிரிகள். அரவு உறையும் புற்று என்றும், கொல்லேறு திரிந்து சுழலும் மன்றம் எனவும் அவன் உறைவிடத்தை நினைப்பர்.