பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



எப்பொழுது வந்து தாக்குவானோ என்ற அச்சம் அவர்களை அலைவுறுத்திக் கொண்டே இருக்கும். அத்தகைய புகழ் ஒளி என் தலைவன் மாட்டு உள்ளது.

இரும்பு முகம் சிதைய நூறி, ஒன்னார் இருஞ் சமம் கடத்தல் ஏனோர்க்கும் எளிதே நல் அரா உறையும் புற்றம் போலவும், கொல் ஏறு திரிதரு மன்றம் போலவும், மாற்று அருந் துப்பின் மாற்றோர், பாசறை உளன் என வெரூஉம் ஓர் ஒளி வலன் உயர் நெடு வேல் என்னைகண்ணதுவே.

திணை - தும்பை, துறை - நூழிலாட்டு. மதுரை இளங்கண்ணிக் கெளசிகனார் பாடியது.

310. பொன் முடியார்

சிறுவன்; கிண்ணத்தில் பால் ஊற்றிக் குடிக்கத் தருவேன்; அவன் குடிக்க மறுப்பான். கையில் கோல் ஒன்று வைத்துக் கொண்டு அடிப்பது போல் நடிப்பேன்; அவன் அதற்கு அஞ்சிக் குடிப்பான். இவன் எதிர்காலத்தில் என்ன செய்யப் போகிறான் என்று அஞ்சிக் கவலைப்பட்டது உண்டு.

இன்று அவன் களிறு எறிந்தான். தரனும் விழுப்புண் பட்டுக் கிடக்கிறான். தோல்மீது படுத்திருக்கிறான். தன் மார்பில் அம்புபட்ட புண், அதை யான் அறியேன். ‘எனக்கே தெரியாது’ என்று கூறுகிறான். அவன் தானா இவன் நினைத்துப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது. பெருமிதம் கொள்கிறேன். மறக்குடியில் பிறந்த மகன் அவன் செயல் வியப்புக்கு உரியது.

பால் கொண்டு மடுப்பவும் உண்ணான்ஆகலின் செறாஅது ஒச்சிய சிறுகோல் அஞ்சி, உயவொடு வருந்தும் மன்னே! இனியே புகர் நிறம் கொண்ட களிறு அட்டு ஆனான், முன்நாள் வீழ்ந்த உரவோர் மகனே, உன்னிலன் என்னும், புண் ஒன்று அம்பு