பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

மான் உளை அன்ன குடுமித் தோல் மிசைக் கிடந்த புல் அணலோனே.

திணையும் துறையும் அவை, பொன்முடியார் பாடியது.

311. ஒளவையார்

புலைத்தி வெளுத்துத் தரும் தூய வெள்ளை ஆடையை

உடுத்தியவன். தெருவில் எருப் புழுதி பட அது அழுக்குப் படியுமே என்று கவலைப்படாமல் பலர்க்கு உறுகுறைகளைத் தீர்த்து வருபவன். இன்று செருக் களத்தில் சினம் மிக்கவனாய்க் கேடயத்தைக் கொண்டு எதிரிகள் விடும் அம்புகளைத் தடுத்துக் கொண்டிருக்கிறான்.

அவன் ஒருவனே இருந்து பகைவர்கள் விடும் அம்பைத்

தடுத்துப் போராடுகிறான். அவனுக்குத் துணையாவார் யாவரும் இல்லை.

களர்ப் படு கூவல் தோண்டி, நாளும், புலைத்தி கழிஇய து வெள் அறுவை. தாது எரு மறுகின் மாசுண இருந்து, பலர் குறை செய்த மலர் தார் அண்ணற்கு ஒருவரும் இல்லைமாதோ, செருவத்துச் சிறப்புடைச் செங் கண் புகைய, ஓர் தோல் கொண்டு மறைக்கும் சால்பு உடையோனே. திணை - அது துறை - பாண்பாட்டு

ஒளவையார் பாடியது.

312. பொன் முடியார்

மகனைப் பெற்று உலகுக்குத் தருவது தாய் என்

கடமையாகும்.

அவனை நற்குண நற்செயல்கள் மிக்கவனாக வளர்ப்பது

தந்தையின் கடமையாகும்.