பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



வேல் வடித்துக் கொடுப்பது கொல்லனின் கடமை ஆகும்.

அவனுக்கான போர்ப் பயிற்சி கற்றுத் தருவது வேந்தனின்

கடமையாகும்.

அமரில் வாள் ஏந்திச் சென்று களிற்றினை எறிந்து திரும்புதல் இளம் வீரனுக்குக் கடமையாகும்.

ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே, சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே, வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே, தண்ணடை நல்கல் வேந்தற்குக் கடனே, ஒளிறு வாள் அரும் சமம் முருக்கிக், களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.

திணை - வாகை, துறை - மூதில்முல்லை.

பொன்முடியார் பாடியது.

313. மாங்குடிகிழார்

வழிப்பாதைகள் மிக்க நாட்டுக்குத் தலைவன் அவன்; கைப் பொருள் அவனிடம் எப்பொழுதும் இருப்பது இல்லை.

அவனை நாடி இரவல் மக்கள் சென்றால் களிற்றொடு நெடுந்தேர் வேண்டினாலும் தந்து சிறப்பிப்பான்.

உப்பங் கழியில் குவித்து வைக்கும் உப்புக் குவியல் போன்றது அவன் செல்வம், அள்ள அள்ளக் குறையாது.

அத்தம் நண்ணிய நாடு கெழு பெருவிறல் கைப் பொருள் யாதொன்றும் இலனே, நச்சிக் காணிய சென்ற இரவல் மாக்கள் களிறொடு நெடுந் தேர் வேண்டினும், கடன்; உப்பு ஒய் சாகாட்டு உமணர் காட்ட கழி முரி குன்றத்து அற்றே, எள் அமைவு இன்று, அவன் உள்ளிய பொருளே.

திணை - அது; துறை - வல்லாண் முல்லை.

மாங்குடி கிழார் பாடியது.