பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

318

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



மடவர் மகிழ் துணை நெடு மான் அஞ்சி இல் இறைச் செரீஇய ஞெலிகோல் போலத், தோன்றாது இருக்கவும் வல்லன்; மற்றதன் கான்று படு கனை எரி போலத், தோன்றவும் வல்லன் - தான் தோன்றுங்காலே.

திணையும் துறையும் அவை.

நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது.

316. மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்

கள் மயக்கத்தில் உலர்ந்த சருகுகளின் தூசு படிந்த தன் வீட்டு முற்றத்தில் தூங்குகின்றான். விடிய விடியத் தூங்குகிறான். அவன் என் தலைவன்; யாம் அவன் பாணன்.

நேற்று அவனைத் தேடி வந்த விருந்தினர்க்கு உணவு தரத் தன் வாளை அடகு வைத்தான்.

இன்று அவனிடம் யாதும் இல்லையென்று கருதாதீர். எதையாவது அடகு வைத்து எப்படியாவது நம்மை உபசரிப்பான். இது உண்மை; யாழ் மீது ஆணை, நீயும் நின் விறலியும் எம்முடன் வருக; விறலி இழையணி பெறுவாள். நாம் கள் பெற்று மகிழ்வோம்.

சென்று நம் வாய் சிவந்து வருவோம்; பசி பறந்து போகும்.

யானை மீது வந்த அரசனை வீழ்த்திவிட்டு அவன் களிப்புடன் உறங்குகின்றான்.

அவன்பால் பரிசில் பெறுவது உறுதி; எம் யாழின் மீது ஆணை.

கள்ளின் வாழ்த்திக், கள்ளின் வாழ்த்திக்,

காட்டொடு மிடைந்த சீயா முன்றில்,

நாட் செருக்கு அனந்தர்த் துஞ்சுவோனே.

அவன் எம் இறைவன், யாம் அவன் பாணர்,

நெருதை வந்த விருந்திற்கு மற்றுத் தன்