பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

319



இரும் புடைப் பழ வாள் வைத்தனன் இன்று இக் கருங் கோட்டுச் சீறியாழ் பணையம்; இது கொண்டு ஈவதிலாளன் என்னாது, நீயும், வள்ளி மருங்குல் வயங்கு இழை அணியக், கள்ளுடைக் கலத்தேம் யாம் மகிழ் தூங்கச், சென்று வாய் சிவந்து மேல் வருக சிறு கண் யானை வேந்து விழும்.உறவே.

திணையும் துறையும் அவை,

மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார் பாடியது.

317. வேம்பற்றுார்க் குமரனார்

முற்றத்தில் நன்கு குடித்து விட்டு மயங்கிக் கிடக்கிறான். எமக்கும் பிறர்க்கும் யாவர்க்கும் தந்துவிட்டுத் துயில் கொள் கின்றான்.

அவன் படுத்து உறங்க ஏதாவது மான் தோல் இருக்குமாயின் தருக; அல்லது ஒலையால் முடையப்பட்ட பாய் இருந்தாலும் எடுத்துத் தருக. அவன் மகிழ்வுடன் உறங்கட்டும்.

எமக்கும் பிறர்க்கும் கொடுத்துக் கொடுத்து அது முடித்த பின்னே அவன் துயில்கிறான்.

வெல் வேல் ..................... ந்து

முன்றில் கிடந்த பெருங் களியாற்கு

அதள் உண்டாயினும், பாய் உண்டாயினும்,

யாது உண்டாயினும், கொடுமின் வல்லே;

வேட்கை மீளப ............


கும், எமக்கும், பிறர்க்கும்,

யார்க்கும், ஈய்ந்து, துயில் ஏற்பினனே.

திணையும் துறையும் அவை.

வேம்பற்றுர்க் குமரனார் பாடியது.

318. பெருங்குன்றுார் கிழார்

வீட்டு இறைகளில் கூடு கட்டி வாழும் குருவிகளில் ஆண் குருவி தன் பெடைக்குச் செந்நெல் அரிசி கொண்டு வந்து உண்ணச் செல்கிறது. புது வருவாய் உடையது வேந்தனது ஊர்.