பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



அதன் வேந்தன் போர்க் களத்தில் உழந்து வருந்துகின்றான். அதனால் அந்த ஊர் மக்கள் வருந்தி வாடுகின்றனர். உணவு உண்ண மறுக்கின்றனர்.

வீட்டு மனையோள் பறித்து வைத்த கீரை இலைகளை அப்படியே விட்டு வைத்துள்ளாள். அவை வாடி வதங்குகின்றன. அடுப்பு எரிக்கக் கொண்டு வந்த விறகுகள் காய்ந்து உலர்ந்து சருகு ஆகின்றன. அவ்வூரே இவ்வாறு பசியால் வாடுகின்றது. வளம் மிக்க ஊர் உளம் மதிக்கும் வேந்தன் துயர் உற்றதால் இவர்கள் அயர்வுற்றனர்.

கொய் அடகு வாடத் தரு விறகு உணங்க, மயில்அம் சாயல் மாஅயோ ளொடு பசித்தன்று அம்ம, பெருந்தகை ஊரே மனை உறை குரீஇக் கறை அணற் சேவல், பாணர் நரம்பின் சுகிரொடு, வய மான் குரல் செய் பீலியின் இழைத்த குடம்பைப், பெருஞ் செய் நெல்லின் அரிசி ஆர்ந்து, தன் புன் புறப் பெடையொடு வதியும் யாணர்த்து ஆகும் - வேந்து விழும்.உறினே.

திணையும் துறையும் அவை. பெருஞ் குன்றுர் கிழார் பாடியது.

319. ஆலங்குடிவங்கனார்

அறிவு முதிர்ந்த பாணனே ஊற்று நீரை முகந்து வைத்தது சாடியில் உள்ளது. மற்றும் உலர வைத்த தினையும் உள்ளது; புறவுக் கறியும் இதர பறவையின் கறிகளும் வேண்டுமானாலும் தர முடியும். பொழுது மறையும் நேரம். அவற்றைச் சமைக்கப் பொழுது காணாது. அதனால் முயற்கறியைச் சுட்டுத் தருகிறோம்;எம் வீட்டில் தங்கி இருந்து அவற்றை உண்டு மகிழ்க.

வளைந்த கொம்பினை உடைய ஆமானின் இளங் கன்றைப் பிடித்து வந்து தேரில் பூட்டிச் சிறுவர் விளையாடும் சிற்றுர் எம்

உஇாT.

எம் சிற்றுார் ஊர் தலைவனாகிய மன்னன் நாட்டு வேந்தன் பணித்த தொழிலை ஏற்றுப் போர் செய்யச் சென்றுள்ளான்.