பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21

ரா.சீ. 321

விரைவில் வெற்றி தந்து வேண்டிய பொருள் பெற்று வருவான்; அப்பொழுது உன் பாடினி அணியப் பொன்மாலை தருவான். உனக்கும் பொற்றா மரை சூட்டிச் சிறப்பிப்பான். இப்பொழுது நீ இருந்து உண்டு செல்க.

பூவற் படுவில் கூவல் தொடீஇய செங் கண் சில் நீர் பெய்த சீறில் முன்றில் இருந்த முது வாய்ச் சாடி யாம் கஃடு உண்டென, வறிது மாசு இன்று; படலை முன்றில் சிறு தினை உணங்கல் புறவும் இதலும் அறவும் உண்கெனப் பெய்தற்கு எல்லின்று பொழுதே அதனான், முயல் சுட்டஆயினும் தருகுவேம் புகுதந்து ஈங்கு இருந்தீமோ, முது வாய்ப் பாண! கொடுங் கோட்டு ஆமான் நடுங்கு தலைக் குழவி புன் தலைச் சிறாஅர் கன்று எனப் பூட்டும் சீறுர் மன்னன் நெருநை ஞாங்கர், வேந்து விடு தொழிலொடு சென்றனன் வந்து, நின் பாடினி மாலை அணிய, * வாடாத் தாமரை சூட்டுவன் நினக்கே.

திணையும் துறையும் அவை, ஆலங்குடி வங்கனார் பாடியது.

320. வீரை வெளியனார்

வேந்தன் தரும் பொருள் அதனைக் கொண்டு பரிசிலர்க்கு வழங்கும் புகழ்மிக்க தலைவன் வாழும் ஊரில் பாணனே நீ வேட்டுவன் மனைவி தரும் உணவினை உண்டு தங்கிச் செல்வாயாக.

பலா மரத்தில் முன்னைக் கொடியும், முசுண்டைக் கொடியும் தவழும். அதன் நறுநிழலில் யானை வேட்டுவன் அயர்ந்து துயில் கொள்கிறான். அவன் பிடித்து வைத்த பார்வை மான்; அது பெண் மான் அது தனித்து இருக்கிறது. அவ்வழிச் செல்லும் ஆண் மான் அதனோடு கூடித் திளைத்து இன்புறுகிறது.

இதனை அவன் காதல் மனைவி பார்க்கிறாள். தன் கணவன் துயில்கின்றான். அவனைத் துயில் எழுப்பவும் விரும்பவில்லை;