பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



அம் மான் இணைக்கு அதிர்ச்சி தரவும் கூடாது; அதனால் நடமாடுவதை நிறுத்திக் கொண்டு ஒருபுறம் ஒதுங்குகிறாள்.

இதுதான் வாய்ப்பு என்று அவள் மான் தோலில் உலர்த்தி வைத்த தினை அரிசியைக் காட்டுக் கோழியும், சிதல் பறவையும் சத்தமிட்டுக் கொத்தித் தின்கின்றன. அவற்றை அவள் தடுத்து நிறுத்தவில்லை; பிடித்துத் தடியவும் விரும்பவில்லை.

அவள் தரும் விருந்து சந்தனக் கட்டையில் சுட்ட மான் இறைச்சியும் மீன் வறுவலும் கொண்டது; பாணனே! நீ உன் சுற்றத்தோடு அதனைத்தின்று மகிழ்வுடன்தங்கிச்செல்வாயாக!

முன்றில் முஞ்ஞையொடு முசுண்டை பம்பிப், பந்தர் வேண்டாப் பலாத் தூங்கு நீழல், கைம்மான் வேட்டுவன் கனை துயில் மடிந்தெனப், பார்வை மடப் பிணை தழிஇப், பிறிது ஓர் தீர் தொழில் தனிக் கலை திளைத்து விளையாட இன்புறு புணர்நிலை கண்ட மனையோள் கணவன் எழுதலும் அஞ்சிக், கலையே பிணைவயின் தீர்தலும் அஞ்சி, யாவதும், இல் வழங்காமையின், கல்லென ஒலித்து, மான் அதள் பெய்த உணங்கு தினை வல்சி கானக் கோழியோடு இதல் கவர்ந்து உண்டென, ஆர நெருப்பின், ஆரல் நாறத் தடிவு ஆர்ந்திட்ட முழு வள்ளுரம் இரும் பேர் ஒக்கலொடு ஒருங்கு இனிது அருந்தித், தங்கினை சென்மோ, பான! - தங்காது, வேந்து தரு விழுக் கூழ் பரிசிலர்க்கு என்று அருகாது ஈயும் வண்மை உரைசால் நெடுந் தகை ஒம்பும் ஊரே.

திணையும் துறையும் அவை. வீரை வெளியனார் பாடியது.

321. உறையூர் மருத்துவன் தாமோதரனார்

பூழ்ச் சேவல் முறத்தில் உலர்த்தி வைத்த மேல் தோல் களையப் பட்டவெள் எள்ளினை உண்டு விட்டு வரப்பெலியைப்