பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

323



பிடித்துத் தின்னத் தாவுகிறது. அது அதற்கு அகப்படாமல் தப்பிச்

சென்று வரகுக் கதிர்களிடையே ஒளிந்து கொள்கின்றது.

அத்தகைய வரப்புகளை உடையது அவ்வூர். அவ்வூர்த் தலை

வன் சென்னி போர்களில் வெற்றிகள் கண்டு புகழ் படைத்தவன்.

பாணனே! நீ அங்குச் சென்றால் சுவை மிக்க பழங்கள் மிகவும் பெறுகுவை. பசி தீர உண்ணத் தருவான்.

பொறிப் புறப் பூழின் போர் வல் சேவல் மேந் தோல் களைந்த தீம் கோள் வெள் எள் சுளகிடை உணங்கல் செவ்வி கொண்டு, உடன் வேனில் கோங்கின் பூம் பொகுட்டு அன்ன குடந்தை அம் செவிய கோட்டு எலி ஆட்ட, கலி ஆர் வரகின் பிறங்கு பீள் ஒளிக்கும், வன் புல வைப்பினதுவே சென்று தின் பழம் பசீஇ ............ னனோ, பாண! வாள் வடு விளங்கிய சென்னிச் செரு வெங் குருசில் ஒம்பும் ஊரே.

திணையும் துறையும் அவை, உறையூர் மருத்துவன் தாமோதரனார்.

322. ஆவூர் கிழார்

காளை எருதின் கொம்பு போல் கவைத்த முள்ளையுடைய கள்ளி மரத்தின் அடியில் துள்ளி வியைாடும் சிறுவர்கள் வரகுத் தாளில் பதுங்கி இருக்கும் கருப்பு எலிகளை வேட்டையாட அம்பு ஏவுகின்றனர். அவ்ஒலி குறுமுயல்களை விரட்டி அடிக்க அவை மட்கலங்களை உருட்டித் தள்ளி விட்டு மன்றங்களில் ஒடுகின்றன. இத்தகைய வளம் குறைந்த வன்புலத்தில் வாழ்பவன் இவன்.

கரும்பு ஆலைகளில் எழும் ஒலி அடுத்துள்ள வாளைகளைப் பிறழச் செய்யும் குளிர்ந்த மருத நிலத்துக்கு உரிய பெரு நிலமன்னர் களை நடுங்க வைக்கின்றான். அத்தகைய போர்த் தலைவன்.இவன்.

உழுது ஊர் காளை ஊழ் கோடு அன்ன கவை முள் கள்ளிப் பொரி அரைப் பொருந்திப்,