பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324

புறநானூறு செய்யுளும் செய்திகளும்

புது வரகு அரிகால் கருப்பை பார்க்கும் புன் தலைச் சிறாஅர் வில் எடுத்து ஆர்ப்பின், பெருங் கண் குறு முயல் கருங் கலன் உடைய மன்றில் பாயும் வன் புலத்ததுவே.கரும்பின் எந்திரம் சிலைப்பின், அயலது. இருஞ் சுவல் வாளை பிறழும் ஆங்கண், தண் பணை ஆளும் வேந்தர்க்குக் கண் படை ஈயா வேலோன் ஊரே,

திணையும் துறையும் அவை.

ஆவூர் கிழார் பாடியது.

323 வல்லாண் முல்லை

பரிசிலர்க்கு வாரி வழங்கும் கொடையோன்; வேல் ஏந்திச்

செய்யும் போர் என்றால் யானை வந்து எதிர்ப்பட்டால்தான் வேல்

ஏந்துவான்; எடுப்பான். அத்தகையதறுகண்மை உடையவன் வாழும்

ஊர் அது; மற்றும் புலியின்பால் மான்பட்டுவிட அதன் கன்றினுக்கு முதியப் பசு தன் பாலைத் தந்து காக்கிறது. அத்தகைய சிறப்பு

உடையது.

புலிப்பாற் பட்ட ஆமான் குழவிக்குச் சினம் சுழி மூதாக் கன்று மடுத்து ஊட்டும் கா . . . . பரிசிலர் க்கு - உள்ளியது சுரக்கும் ஓம்பா ஈகை, வெள் வேல் ஆவம்ஆயின், ஒள் வாள் கறையடி யானைக்கு அல்லது உறை கழிப்பு அறியா, வேலோன் ஊரே.

திணையும் துறையும் அவை ... கிழார் பாடியது.

324. ஆலத்துார் கிழார்

வெருக்குப் போன்ற வெருண்ட நோக்கு உடைய சிறுவர்கள்

வேல மரத்தில் முள்ளை ஊகம் புல்லில் செருகி அம்பாக