பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

325



அமைத்து வளர் நாரால் பிணிக்கப்பட்ட வில்லில் வைத்துப் பருத்தி

மர வேலியின் கீழ்ப் பதுங்கி உள்ள எலிகளை வீழ்த்தக் குறிபார்ப்பர். அத்தகைய புன்செய் நிலத்தில் வாழ்பவர்க்குத் தலைவன். மற்றும் குமிழம் பழத்தை உண்டு வெள்ளாடுகள் எருவாய் வழியாக வெளிப் படுத்திய வெள்ளை நிறத்துக் கொட்டைகள் பிழுக்கைகளாகப் பரந்து கிடக்கும் இடத்தில் பந்தலில் கீழ் இடையர் பொத்திய சிறு தீ விளக்கத்து ஒளியில் அவன் பாணரோடு அளவளாவும் இயல்பினன். அத்தகையோன் வளம் மிக்க பேரரசனுக்கு உற்றுழி உதவும் நெஞ்சு ஆர்ந்த துணைவன் ஆவான்.

வெருக்கு விடை அன்ன வெருள் நோக்குக் கயந் தலை, புள் ஊன் தின்ற புலவு நாறு கய வாய், வெள் வாய் வேட்டுவர் வீழ் துணை மகாஅர் சிறியிலை உடையின் சுரையுடை வால் முள் ஊக நுண் கோல் செறித்த அம்பின், வலாஅர் வல்வில் குலாவரக் கோலிப், பருத்தி வேலிக் கருப்பை பார்க்கும் புன் புலம் தழீஇய அம் குடிச் சீறுார், குமிழ் உண் வெள்ளை பகு வாய் பெயர்த்த வெண் காழ் தாய வண் காற் பந்தர், இடையன் பொத்திய சிறு தீ விளக்கத்துப், பாணரொடு இருந்த நாணுடை நெடுந்தகை வலம் படு தானை வேந்தர்க்கு உலந்துழி உலக்கும் நெஞ்சு அறி துணையே.

திணையும் துறையும் அவை, ஆலத்தூர் கிழார் பாடியது.

325. உறையூர் முதுகண்ணன் சாத்தனார்

கரம்பை நிலம் அதில் பன்றி கிளர்த்திட்டகுழி அதில் மழைநீர் நிரம்ப அதனைப் பசுவும் கன்றும் குடித்துவிட எஞ்சிய கலங்கல் நீர் அதனைக் குடித்து நிறைவு பெறாத வாழ்க்கையர்.

வழக்கமாக முள்ளம் பன்றியைக் கொன்று பழக்கப்பட்டவர் கள் உடும்பினைக் கொன்று அதனைக் கூறுபடுத்தி ஒடுவங் கழி