பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326

புறநானூறு செய்யுளும் செய்திகளும்


கொண்டு சார்த்தப்பட்ட மறைவினை உடைய முற்றத்தில் அதனைக் கொள்ளியில் இட்டுச் சுட அதன் நாற்றம் தெரு மன்றங்களில் பரவும்.

அம் மன்றங்களில் உலர்ந்த இலந்தி மரங்களின் நிழலில் அக்கானவர் சிறுவர்கள் அம்புகள் எய்து விளையாடுவர். அத்தகைய வன்புல இருக்கை அவர்களது; வேந்தர்களே தன்னை எதிர்த்து வந்தாலும் தடுத்து நிறுத்தும் ஆற்றலும், ஈகைப் பண்பும் உடைய எம் தலைவன் வாழும் ஊர் அதுவாகும்.

களிறு நீறு ஆடிய விடு நில மருங்கின், வம்பப் பெரும் பெயல் வரைந்து சொரிந்து இறந்தெனக், குழி கொள் சில் நீர் குராஅல் உண்டலின், சேறு கிளைத்திட்ட கலுழ் கண் ஊறல் முறையின் உண்ணும் நிறையா வாழ்க்கை, முளவு மாத் தொலைச்சிய முழுச்சொல்-ஆடவர் உடும்பு இழுது அறுத்த ஒடுங் காழ்ப் படலைச் சீறில் முன்றில் கூறுசெய்திடுமார், கொள்ளி வைத்த கொழு நிண நாற்றம் மறுகுடன் கமழும் மதுகை மன்றத்து, அலந்தலை இரத்தி அலங்குபடு நீழல், கயந் தலைச் சிறாஅர் கணை விளையாடும் அரு மிளை இருக்கையதுவே. வென் வேல் வேந்து தலைவரினும் தாங்கும், தாங்கா ஈகை, நெடுந்தகை ஊரே.

திணையும் துறையும் அவை,

உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடியது.

326. தங்கால் பொற் கொல்லனார்

ஊரில் பழைய வேலியின்கண் தங்கியுள்ள வெருகுப் பூனை அது இருளில் விழித்துப் பார்க்க அதற்கு அஞ்சிய பெடைக் கோழி பருத்தி நூற்கும் பெண் ஒருத்தியின் விளக்கு நிழலில் சேவற்கோழியைக் கண்டு அச்சம் தணிகிறது. அத்தகைய காவற் காடு சூழ்ந்த இருக்கை அது.

அவ்வூர்த் தலைவன் மனைவியும் வேட்டை ஆடும் சிறுவர் சேண் தூரம் செல்லாது மடுக்கரையில் பிடித்து வந்த குறுந்தாளை