பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

327


உடைய உடும்பின் கொழுப்புக் கலந்த இறைச்சியைச் சமைத்து அதனோடு தயிர் பெய்த சோற்றையும், புதிதாகக் கிடைத்த வேறு நல்ல உணவுகளையும் பாணர்களுக்கும் அவர்களோடு வரும்

சுற்றத்தினர்க்கும் விருந்து அளித்து உதவும் வாழ்க்கையினள். அவள் கணவன் பேரரசர்களுக்காகப் போர்களுக்குச் சென்று பெரு யானைகளைக் கொணர்ந்து அவற்றை அப் பாணர்க்குப் பரிசிலாகத் தருகிறான்.

ஊர் முது வேலிப் பார் நடை வெருகின் இருட் பகை வெரீஇய நாகு இளம் பேடை உயிர் நடுக்குற்றுப் புலா விட்டு அரற்றச், சிறையும் செற்றையும் புடையுநள் எழுந்த பருத்திப் பெண்டின் சிறு தீ விளக்கத்துக், கவிர்ப் பூ நெற்றிச் சேவலின் தணியும் அரு மிளை இருக்கையதுவே மனைவியும், வேட்டச் சிறாஅர் சேண் புலம் படராது, படப்பைக் கொண்ட குறுந் தாள் உடும்பின் விழுக்கு நிணம் பெய்த தயிர்க் கண் விதவை, யாணர் நல்லவை பாணரொடு, ஒராங்கு வரு விருந்து அயரும் விருப்பினள், கிழவனும், அருஞ் சமம் ததையத் தாக்கிப், பெருஞ் சமத்து அண்ணல் யானை அணிந்த பொன் செய் ஓடைப் பெரும் பரிசிலனே.

திணை - வாகை துறை - மூதில் முல்லை.

தங்கால் பொற்கொல்லனார் பாடியது.

327. மூதில் முல்லை

எருதுகளைக் கொண்டு கடாவிடாமல் இளைஞர்களே தம் காலால் மிதித்து வேறுபடுத்திய வரகு, மிக்க விளைவு இல்லாதது; அது மிகச்சிறிய அளவினது; அதனைக் கடன் வாங்கியவருக்குச் செலுத்தி மிச்சம் மீதி இருந்தால் அதனைப் பசித்து வந்த பாணர்க்கு உண்ணத் தருவான்; அதுவும் தீர்ந்து விட்டால் பசித்த அவன் சுற்றத்துக்கு உணவு தரக் கையிருப்பு இல்லாததால் கடன் கொடுக்கும் அற்பர்களிடம் அவரை அணுகி வரகு கடன் பெற்று வருவான்.