பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



போர் வந்தால் பெரு நில மன்னர்க்காகப் போரிட்டு எதிர்க்கும் தொழிலை அவன் மேற்கொள்கிறான். அந்த நம்பிக்கை அவனுக்கு உள்ளது. கொண்டு வருவதைக் கொண்டு அவன் வாங்கிய கடனைத் தீர்ப்பான்.

எருது கால் உறாஅது, இளைஞர் கொன்ற சில் விளை வரகின் புல்லென் குப்பை, தொடுத்த கடவர்க்குக் கொடுத்த மிச்சில் பசித்த பாணர் உண்டு, கடை தப்பலின் ஒக்கல் ஒற்கம் சொலியத் தன் ஊர்ச் சிறு புல்லாளர் முகத்து அளவ கூறி, வரகு கடன் இரக்கும் நெடுந் தகை அரசு வரின் தாங்கும் வல்லாளன்னே.

திணையும் துறையும் அவை,

        • * * * * * * * * ***** ********* * * * * * * * * * * * *

328. மூதில் முல்லை

முல்லை நிலம் அதனால் அங்கு நெற் பயிர் விளையாது. வரகும் தினையும் உள்ளவற்றை எல்லாம் இரவல் மாக்களுக்குக் கொடுத்துத் தீர்த்துவிட்டான்.

தாளி மரத்தில் படரும் முன்னைக் கொடியை முயல் வந்து கறிக்கும் முற்றத்தை உடைய சீறுர் மன்னன் அவன்; அவனைப் பாடினையாகி அவனிடம் சென்றால் பாணனே உறையிட்ட தயிர், புளித்த கள், நெய் கலந்த கறிசோறு இவற்றை உண்ணத் தருவான். பின்பு நீ வேண்டுவன தருவான்.

புல்லென் அடை முதல் புறவு சேர்ந்திருந்த புன் புலச் சீறுர், நெல் விளையாதே; வரகும் தினையும் உள்ளவை எல்லாம் இரவல் மாக்களுக்கு ஈயத் தொலைந்தன;

- - - - - - - - - ---- டு அமைந்தனனே, அன்னன் ஆயினும், பாண! நன்றும் வள்ளத்திடும் பாலுள் உறை தொடரியொடு. களவுப் புளி அன்ன விளைகள்