பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

329



- - - - - - - - - - - - - - - - - - - - வாடு ஊன் கொழுங் குறை கொய் குரல் அரிசியோடு நெய் பெய்து அட்டுத், துடுப்போடு சிவணிய களிக் கொள் வெண் சோறு உண்டு, இனிது இருந்த பின்றை

- - - - - - - - - - - - - - - - - தருகுவன் மாதோதாளி முதல் நீடிய சிறு சிறு முஞ்ஞை முயல் வந்து கறிக்கும் முன்றில். சீறுர் மன்னனைப் பாடினை செலினே.

திணையும் துறையும் அவை. urώ ........................... பாடியது.

329. மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்

கள்ளை அட்டு உண்பர்; வீடுகள் சிலவே உள்ள சிற்றுர் அது. நட்டகல்லுக்கு நாளும் பலியிடுவர்; அதற்கு நன்னீர் ஆட்டுவர். நெய் விளக்கு எழுப்பும் புகை தெருவில் எங்கும் பரவுகிறது. அது படை இருக்கை என்றாலும் அது அரவு உறையும் புற்றுப் போன்றது.

அதில் வாழும் தலைவன் தனக்குப் பொருள் தரும் பெரு மன்னனின் கட்டளைக்கு முதலிடம் தாரான்; புலவர்களின் துயர் களைவதற்கு முந்திக் கொள்வான். புகழ் அமைந்த தலைமை அவன்பால் உள்ளது. அவன் காக்கும் ஊர் அத்தகையது.

இல் அடு கள்ளின் சில் குடிச் சீறுர்ப் புடை நடு கல்லின் நாட் பலி ஊட்டி, நல் நீராட்டி, நெய்ந் நறைக் கொளி இய, மங்குல் மாப் புகை மறுகுடன் கமழும், அரு முனை இருக்கைத்துஆயினும், வரி மிடற்று அரவு உறை புற்றத்து அற்றே-நாளும் புரவலர் புன்கண் நோக்காது, இரவலர்க்கு அருகாது ஈயும் வண்மை, உரைசால், நெடுந்தகை ஒம்பும் ஊரே திணையும் துறையும் அவை.

மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் பாடியது.