பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330

புறநானூறு செய்யுளும் செய்திகளும்


330. மதுரைக்கணக்காயனார்

பெரு வேந்தனின் அரியபடை போர் முனையில் அழிவு பெற அவர்களைத் தாக்க இவன் தனி ஒருவனாக வாளொடு சென்று விலக்கி இவன் பெருங் கடலுக்குக் கரையைப் போல விளங்குகிறான்.

புரவு வரியும் செலுத்த இயலாத நிலைமையன், மற்றும் இவன் பாடிச் சென்ற புலவர்க்கு வாரி வழங்கவும் பொருள் வளம் இல்லாதவனாக விளங்குகிறான்.

சிற்றுர்த் தலைவன் அவன் காலம் காலமாக பெருங் கொடை யாளனாக விளங்கியவன்.

வேந்துடைத் தானை முனை கெட நெரிதர,

ஏந்து வாள் வலத்தன் ஒருவன் ஆகித்,

தன் இறந்து வாராமை விலக்கலின், பெருங் கடற்கு

ஆழி அனையன்மாதோ என்றும்

பாடிச் சென்றோர்க்கு அன்றியும், வாரிப்

புரவிற்கு ஆற்றாச் சீறுர்த்

தொன்மை சுட்டிய வண்மையோனே

திணையும் துறையும் அவை,

மதுரைக் கணக்காயனார் பாடியது.

331. உறையூர் முது கூத்தனார்

கல்லை உடைத்துக் கிணறுகள் படைக்கும் சீறுார்; அதில் வில்லை ஏற்றி வேட்டை ஆடும் தொழிலை உடையவன்.

வறிய நிலை உற்று உண்ணச் சிறிதும் அவன்பால் இல்லை என்றால் கல்லா இடையன் தீக்கடை கோலில் சிறு தீ உண்டாக்குவது போல் இல்லாததைப் படைக்கவும் வல்லவன்

ஆகிறான்.

உள்ளது மிகச் சிறிது என்றாலும் வீட்டுப் பந்தலில் கூடி இருப்பார் மிக்கு இருந்தாலும் வாட்டும் பசியைப் போக்கும் மனைக் கிழத்தி போல் பலருக்கும் உள்ளதைப் பகிர்ந்து அளிக்கவும் வல்லன், பொருள் மிக்கு இருந்தால் காவல் மன்னர்கள்