பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

331


பலரும் உண்ணக் களத்தில் கண் கொட்டிக் குவிக்கும் பலிச் சோறு போலத் துவவும் வல்லான் வாரி வழங்குமிடத்து.

கல் அறுத்து இயற்றிய வல் உவர்க் கூவல், வில் ஏர் வாழ்க்கைச் சீறுர் மதவலி நனி நல்கூர்ந்தனன் ஆயினும், பனி மிகப், புல்லென் மாலைச் சீறு தீ ஞெலியும் கல்லா இடையன் போல, குறிப்பின் இல்லது படைக்கவும் வல்லன் உள்ளது தவச் சிறிது ஆயினும் மிகப் பலர் என்னாள், நீள் நெடும் பந்தர் ஊண் முறை ஊட்டும் இற் பொலி மகடூஉப் போலச் சிற் சில வரிசையின் அளிக்கவும் வல்லன் உரிதினின் காவலர் மன்னர் கடைமுகத்து உகுக்கும் போகு பலி வெண் சோறு போலத் துவவும் வல்லன், அவன் தூவுங்காலே.

திணையும் துறையும் அவை, உறையூர் முது கூத்தனார் பாடியது.

332. விரியூர் நக்கனார்

இவ்வூர் மறவனது வேல் மற்றவர்கள் வேலைப் போன்றது அன்று.

இதன் இரும்புப் பகுதி துகள் படிந்து எங்கோ மூலையில் குடிசையின் கூரையில் செருகப்பட்டிருக்கும். இருக்கிற இடமே தெரியாது.

இதற்கு விழா எடுக்கும் காலத்து மங்கல முழவு ஒலிக்க இசைப்பாடுவோர் தொடர நீராட்டுப் பெறும்; வீதி வலம் வருவதும் செய்யும்.

போர்க் களத்துக்குச் சென்று எதிரி அரசன் கடல் போன்ற சேனையில் உள்ள களிறுகளின் முகத்திலும் சென்று பாயும்.

பிறர் வேல் போலாதாகி, இவ் ஊர் மறவன் வேலோ பெருந் தகை உடைத்தே; இரும் புறம் கூரைக் கிடக்கினும் கிடக்கும்: