பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



மங்கல மகளிரொடு மாலை சூட்டி, இன் குரல் இரும் பை யாழொடு ததும்பத், தெண் நீர்ப் படுவினும் தெருவினும் திரிந்து, மண் முழது அழுங்கச் செல்லினும் செல்லும், ஆங்கு, இருங் கடல் தானை வேந்தர் பெருங் களிற்று முகத்தினும் செலவு ஆனதே.

திணையும் துறையும் அவை.

விரியூர் நக்கனார் பாடியது.

333.மூதில் முல்லை

மழைநீர் மொக்குள் போன்ற கண்களையும், கரிய பிடரிமயிரினையும், நெடிய செவியினையும் உடைய முயல் குறுகிய புதரிடைத் துள்ளி விளையாடும் மன்றத்துக்கு அருகே சென்றால் உண்க என்று அழைத்து வரவேற்று இன்னுரை கூறும் நிலையில் அவர்கள் இல்லை. அதனால் சிறிது மன வருத்தம் ஏற்படலாம். அவர்கள் வரவேற்பு அதனை எதிர்பார்க்க வேண்டாம். புலவர்களே நீங்கள் அங்குத் தங்கிச் செல்லலாம்.

ஏற்கனவே அவ்வீட்டுக்குரியவள் தம்மிடத்து இருந்த தினையையும், வரகையும் யாவற்றையும் இரவலர்க்கு உண்க எனக் கூறித் தந்துவிட்டவள்; என்ன செய்வாள் கடன் கேட்டுப் பெற முயல்கிறாள். அதனை அவள் பெற இயலவில்லை; அதனால் விதைக்கு என வைத்திருக்கும் தினையை உரலில் பெய்து உணவு இடுவாள். உங்களைக் காயும் பசியோடு அனுப்பமாட்டாள்.

தேரைச் செலுத்துவோருடன் அரசனும் தன்பால் வந்தனன் ஆயினும் அவர்களுக்கும் இவ்வரகும் தினையுமே உண்ணத் தருவர். உள்ளது அது; இல்லை என்று கூறமாட்டார்கள். - அவன் ஈட்டும் பொருள் எல்லாம் பசி வாட்டும் இரவலர்க்கே தருவான்.

நீருள் பட்ட மாரிப் பேர் உறை

மொக்குள் அன்ன பொகுட்டு விழிக் கண்ண,

கரும் பிடர்த் தலைய, பெருஞ் செவிக் குறு முயல்