பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

342

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



கலங்களில் கொண்டு வந்த பொன் குவியலைக் கழிகளில் இயங்கும் படகுகளில் கொண்டு சென்று கரை சேர்க்கின்றனர்.

மலைபடு பொருளும் அலைபடு பொருளும் தன்னிடம் வருவார்க்கு வழங்கும் குட்டுவனின்கள்வளம் மிக்க முசிறி என்னும் மாநகர்.

- இந்த முசிறிபோல அடுக்கி வந்த பொன்னையும் பொருளை யும் கொண்டு வந்து குவித்தாலும் இவள் தந்தை தன் மகளைக் கொடுக்க மறுக்கிறான்.

அவர்களும் பொறுக்காதவராகி அவளை அடைவது என்பதில் உறுதி கொண்டு உள்ளனர்.

ஏணிகள் அமைத்து மதில்களில் ஏறத் தொடங்கிவிட்டனர். இனி இந்த ஊர் கலக்கம் அடையப் போகிறது. ஊரே அல்லலில் ஆழப் போகிறது.

‘மீன் நொடுத்து நெல்குவைஇ, மிசை அம்பியின் மனை மறுக்குந்து, மனைக் குவைஇய கறி மூடையால், கலிச் சும்மைய கரை கலக்குறுந்து: கலம் தந்த பொற் பரிசம் கழித் தோணியான், கரை சேர்க்குந்து மலைத் தாரமும் கடல் தாரமும் தலைப் பெய்து வருநர்க்கு ஈயும் புனல்அம் கள்ளின் பொலந் தார்க் குட்டுவன் முழங்கு கடல் முழவின் முசிறி அன்ன, நலம்சாம் விழுப் பொருள் பணிந்து வந்து கொடுப்பினும், புரையர் அல்லோர் வரையலள், இவள் எனத் தந்தையும் கொடா அன்ஆயின் - வந்தோர், வாய்ப்பட இறுத்த ஏணி ஆயிடை வருந்தின்றுகொல்லோ தானே - பருந்து உயிர்த்து இடை மதில் சேக்கும் புரிசை, படை மயங்கு ஆர் இடை, நெடு நல் ஊரே?

திணையும் துறையும் அவை,

பரணர் பாடியது.