பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

341



வளம் மிக்க மருத நிலத்துத் தலைவர் இவள் தந்தை ஆவார்.

வேந்தர்கள் மகள் கேட்டு மறுத்துவிட்டதால் அவர்கள் பொறுத்துக் கொள்ளாமல் போரில் இறங்கிவிட்டனர்.

நாளும் அவள் தமையன்மார் இயற்றும் வாட் போரை இந்த ஊர் சந்தித்துக் கொண்டிருக்கிறது யானைகள் எருதுகளாகப் பிணங்களைப் புரட்டி மிதிக்கின்ற நிலைக்கு இந்த ஊர் தள்ளப்பட்டுவிட்டது.

‘கானக் காக்கைக் கலிச் சிறகு ஏய்க்கும் மயிலைக் கண்ணிப், பெருந் தோள் குறுமகள், ஏனோர் மகள்கொல் இவள்? என விதுப்புற்று, என்னொடு வினவும் வெல்வேல் நெடுந்தகை! திரு நயத்தக்க பண்பின் இவள் நலனே பொருநர்க்கு அல்லது, பிறர்க்கு ஆகாதே; பைங் காற் கொக்கின் பகு வாய்ப் பிள்ளை மென் சேற்று அடைகரை மேய்ந்து உண்டதற்பின், ஆரல் என்ற ஐயவி முட்டை, கூர் நல் இறவின் பிள்ளையொடு பெறுஉம் இவள் தந்தையும்; வேந்தரும் பெறாஅமையின் பேர் அமர் செய்தலின், கழி பிணம் பிறங்கு போர்பு அழி களிறு எருதா, வாள் தக வைகலும் உழக்கும் * மாட்சியவர், இவள் தன்னைமாரே.

திணையும் துறையும் அவை,

அரிசில் கிழார் பாடியது.

343. மகட்பாற் காஞ்சி

மீனை விற்று நெற்குவியல்களைச் வீடுகளில் கொண்டு வந்து சேர்த்துக் குவிக்கின்றனர்.

வீட்டில் குவித்த வைத்த மிளகு மூடைகளை வெளி ஊர்களுக்கு ஏற்றி அனுப்பிக் கடற்கரையில் கொண்டு வந்து சேர்க்கின்றனர்.