பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



கழனிகள் மிக்க அவ்வூர் இனிக் கவின் இழக்கப் போகிறது.

இந்த மகள் காரணமாக ஊரே அழிவில் வந்து நிற்கிறது. மறவர் மகள் அதனால் வந்த சீர்குலைவு இது.

வேந்து குறையுறவும் கொடாஅன், ஏந்து கோட்டு அம் பூந் தொடலை அணித் தழை அல்குல், செம் பொறிச் சிலம்பின் இளையோள் தந்தை, எழு விட்டு அமைத்த திண் நிலைக் கதவின் அரை மண் இஞ்சி நாட் கொடி நுடங்கும்

புலிக் கணத்து அன்ன கடுங் கண் சுற்றமொடு, மாற்றம் மாறான், மறலிய சினத்தன், ‘பூக் கோள் என ஏஎய்க், கயம் புக்கனனே, விளங்குஇழைப் பொலிந்த வேளா மெல் இயல், சுணங்கு அணி வன முலை, அவளொடு நாளை மணம் புகு வைகல் ஆகுதல் ஒன்றோ ஆர் அமர் உழக்கிய மறம் கிளர் முன்பின், நீள் இலை எஃகம் மறுத்த உடம்பொடு, வாரா உலகம் புகுதல் ஒன்று எனப் படை தொட்டனனே, குருசில்; ஆயிடைக் களிறு பொரக் கலங்கிய தண் கயம் போலப் பெருங் கவின் இழப்பதுகொல்லோ, மென் புனல் வைப்பின் இத் தண் பணை ஊரே!

திணையும் துறையும் அவை.

பரணர் பாடியது.

342. மகட்பாற் காஞ்சி

காக்கைக் சிறகு போன்ற இருள் வாசிப் பூவால் தொடுக்கப் பட்ட கண்ணிமாலையை உடைய இவ்வழகி இவள் மறக்குலத்து அல்லாத பிறகுலத்துப் பெண் என்று கருதி இவள் யார்? என்று வினவுகின்ற வேலவனே கேள்.

திருமகள் போன்ற அருங்குணம் படைத்த இவள் மறவனுக்கே உரியள் அன்றிப் பிறவர்க்கு அரியள் ஆவாள்.