பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

339



340. மகட்பாற் காஞ்சி

தழை அணிந்து அழகுடன் விளங்குகிறாள்; செம்மணி போன்று குன்றிமணிக் கொத்துகளைத் தொடுக்கும் இவ் இளையோள் யார் என்று வினவுகின்றாய்; கேள்.

வீரம் மிக்க மைந்தர்களின் தந்தை தன்மகளைக் கரந்தைக் கொடி மிக்க வயலின்கண் யானைகளை வீழ்த்தி வெற்றி கொள்ளும் பேரரசனுக்கே தருவான். அரசர் வந்து மணக்கும் தகுதி அவள் பால் உள்ளது. வீரம் மிக்க மன்னர்க்கே அவள் தாரம் ஆவாள்.

அணித் தழை நுடங்க ஓடி, மணிப் பொறிக்

குரல் அம் குன்றி கொள்ளும் இளையோள்,

LD[T LD56TT ......................

யார் மகள் கொல் என வினவுதி, கேள், நீர்;

எடுப்பவெடாஅ ...............................

- * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * மைந்தர் தந்தை

இரும் பனை அன்ன பெருங் கை யானை

கரந்தை அம் செறுவின் பெயர்க்கும்

பெருந் தகை மன்னர்க்கு வரைந்திருந்தனனே.

திணையும் துறையும் அவை,

அள்ளுர் நன்முல்லையார் பாடியது.

341. மகட்பாற் காஞ்சி

வேந்தன் பணிந்து பாவையைப் பெற விழைந்தான். சிலம்பு அணிந்தவள்; தழை அணிந்த மெல்லியலாள் தந்தை மறுத்தான்.

இருவருக்கும் போர் என்ற பேச்சு எழுந்தது; மறவர்களைப் போருக்குப் பணித்தான். தானும் போருக்குப் புறப்பட நீரில் முழுகச் சென்றான். -

மகள் கேட்ட மன்னன் அவனும் போருக்கு நின்றான். ஒன்று அவளை மணந்து மகிழ்வது; அன்றிப் பொருது விண்ணுலகம் சேர்வது என்று சூள் உரைத்தான்.

இருவருக்கும் இடையில் இந்தச் சிற்றுார் என்ன பாடுபடப் போகிறதோ? களிறு படிந்து கலங்கும் நீர்த்துறை போலக் கலக்கம் உற்றது அவ்வூர்.