பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



பிணங்கு கதிர்க் கழனி நாப்பண், ஏமுற்று உணங்கு கலன் ஆழியின் தோன்றும் ஓர் எயில் மன்னன் ஒரு மட மகளே.

திணையும் துறையும் அவை, குன்றுர் கிழார் மகனார் பாடியது

339. மகட்பாற் காஞ்சி

பசுக்களை மேய்க்கும் ஆயர் சிறுவர் முல்லைப் பூ பறிப்பர் குறுங்கோல் கொண்டு துரத்தப்பட்ட குறுமுயல் நீரில் உள்ள வாளை மீன்களோடுஅவற்றை ஒப்பத் துள்ளித்தாவும்: தொடியணிந்த மகளிர் கடலில் பாய்ந்து பின் கயத்தில் ஆடிக் கழியின் கண் உள்ள நெய்தல் பூவினைப் பறிப்பர். இத்தகு சிறப்புகள் உடையது அவ்வூர்.

இளையள்; பருவம் எய்தாத உருவ நங்கை, அவள் மறம்மிக்க பேரரசன் தம் உள்ளத்தைக் கொள்ளை கொண்டுவிட்டாள். அவர்களை அவளுக்காக போர் செய்யத் தூண்டுபவள் ஆகிறாள்.

வியன் புலம் படர்ந்த பல் ஆ நெடு ஏறு மடலை மாண் நிழல் அசைவிடக், கோவலர் வீ ததை முல்லைப் பூப் பறிக்குந்து, குறுங் கோல் எறிந்த நெடுஞ் செவிக் குறுமுயல் நெடு நீர்ப் பரப்பின் வாளையொடு உகளுந்து தொடலை அல்குல் தொடித் தோள் மகளிர் கடல் ஆடிக் கயம் பாய்ந்து, கழி நெய்தல் பூக்குறுஉந்து: பைந் தழை துயல்வரும் செறு வில் ததைந்த

S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S கலத்தின் வளர வேண்டும், அவளே, என்றும் - ஆர் அமர் உழப்பதும் அமரியளாகி, முறம் செவி யானை வேந்தர் மறம் கெழு நெஞ்சம் கொண்டு ஒளித்தோளே.

திணையும் துறையும் அவை.