பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

337



காய் நெல் கவளம் தீற்றிக், காவுதொறும் கடுங்கண் யானை காப்பனர் அன்றி, வருதல் ஆனார் வேந்தர் தன்னையர் பொரு சமம் கடந்த உரு கெழு நெடு வேல் குருதி பற்றிய வெருவரு தலையர், மற்று இவர் மறனும் இற்றால், தெற்றென யார் ஆகுவர்கொல் தாமே- நேரிழை உருத்த பல் சுணங்கு அணிந்த மருப்பு இள வன முலை ஞெமுக்குவோரே?

திணையும் துறையும் அவை. கபிலர் பாடியது.

338. மகட்பாற் காஞ்சி

நெடுவேள் ஆதனின் வளம்மிக்க ஊராகிய போந்தை போன்ற

செழிப்பும் வனப்பும் கொண்டவள் அவள்.

அவள் செல்வமகள்; மதில் சூழ்ந்த மனையில் வாழ்பவள். அவளை வேம்பு, ஆத்தி, பனை சூடிய மூவேந்தராயினும் பணிந்து வணங்கி வந்து கேட்டால்தான் அவளை அடைய முடியும். படை கொண்டு அச்செல்வ மகளை யாராலும் அடைய முடியாது. வணங்காதவர்க்கு அவன் இணங்காதவன் ஆவான்.

கடலில் கரையில் ஒதுக்கப்பட்ட மரக்கலத்தைப் போலத் தனித்துக் காட்சி தரும் ஒரே மதிலை உடைய அரண்மனையில் வாழும் மன்னன் ஒரே மகள் இவள் ஆவாள்.

ஏர் பரந்த வயல், நீர் பரந்த செறுவின், நெல் மலிந்த மனை, பொன் மலிந்த மறுகின், படு வண்டு ஆர்க்கும் பல் மலர்க் காவின், நெடு வேள் ஆதன் போந்தை அன்ன, பெருஞ் சீர் அருங் கொண்டியளே கருஞ் சினை வேம்பும் ஆரும் போந்தையும் மூன்றும் மலைந்த சென்னியர், அணிந்த வில்லர், கொற்ற வேந்தர் வரினும், தன் தக வணங்கார்க்கு ஈகுவன்அல்லன்-வண் தோட்டுப்