பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

336

புறநானூறு செய்யுளும் செய்திகளும்


337. மகட்பாற் காஞ்சி

சோழ நாட்டுத் தலைவன் இவன்; ஆரவாரம் மிகப்பெரியதாக உள்ளது; இவனைப் பற்றிய பேச்சு எங்கும் எதிர் ஒலிக்கிறது.

பிறர் பார்வைக்கு அகப்படாமல் கொடை வளம் மிக்க பாரியின் பணிச்சுனைத் தெளிந்த நீரைப்போல் இவள் ஒதுக்கப்பட்டு மனையில் செறித்து வைக்கப்பட்டிருக்கிறாள்.

இவள் தமையன்மார்கள் குருதி படிந்த தலைமுடியினராய் வேலும் கையுமாகத் திரிந்து வருகின்றனர். களம் காணும் மறவராக விளங்குகின்றனர்.

இவளைத் தேடி வருகின்ற அரசர்கள் தம் நகர்களில் அவர்கள் செய்ய வேண்டிய கடமைகளைத் துறந்து இங்கு வந்து காத்திருக்கின்றனர்; அவர்கள் யானைகளுக்குக் கவளம் இட்டுக் காத்தவராக இவளை வந்து வளைத்துக் கொண்டிருக்கின்றனர்.

யார் இவளை வந்து அடையப் போகிறார்களோ இவள் இளமுலை யாருக்குத் தழுவ உரியது ஆகப் போகிறதோ இந்த முற்றுகைகள் எங்கே சென்று முடியப் போகின்றனவோ இவள் ஏந்திய கை யாருக்கு மாலையிடப் போகிறதோ தெரியாமல் இருக்கிறது.

ஆர்கலியினனே, சோணாட்டு அண்ணல், கவி கை மண் ஆள் செல்வர் ஆயினும், வாள் வலத்து ஒழியப் பாடிச் சென்றாஅர், வரல்தோறு அகம் மலர்பு ஈதல் ஆனா விலங்கு தொடித் தடக் கைப் பாரி பறம்பின் பனிச் சுனைபோலக் காண்டற்கு அரியள் ஆகி, மாண்ட பெண்மை நிறைந்த பொலிவொடு, மண்ணிய துகில் விரி கடுப்ப நுடங்கித் தண்ணென அகில் ஆர் நறும் புகை ஐது சென்று அடங்கிய கபில நெடு நகர்க் கமழும் நாற்றமொடு. மனைச் செறிந்தனளே, வாணுதல்; இனியே அற்றன்றுஆகலின், தெற்றெனப் போற்றிக்,