பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

335



ஒளிறு ஏந்து மருப்பின் களிறு எறிந்து வீழ்ந்தெனக், கல்லே பரவின் அல்லது, நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே.

திணையும் துறையும் அவை, மாங்குடி கிழார் பாடியது.

336. மகட்பாற் காஞ்சி

மணம் விரும்பிக் கேட்ட வேந்தனும் அடங்காச் சினத்தினனாக உள்ளான்.

இவளை மணம் முடித்துத் தரத் தந்தையும் இசையான்; அவன் மறுத்து நிற்கின்றான்.

போர்மூண்டு எழுந்து விட்டது: யானைகள் கட்டு அவிழ்த்து விடப்பட்டுள்ளன. இரு திறத்து வீரர்களும் ஒருவரோடு மற்றொருவர் பேசாமல் வாய் திறக்காமல் இருக்கின்றனர். வாத்திய முழக்கங்கள் பேரிரைச்சல் செய்து கொண்டிருக்கின்றன. காவல் மிக்க இவ்வூர் மிகவும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளது. வேங்கை மரம் மிக்க மலையில் பூக்கும் கோங்கம் முகை போன்ற இளமுலையள் அவள் வனப்பும் புன்னகையும் காரணம் ஆகும். அதனோடு அவள் தாய் விட்டுக்கொடுக்காத கோட்பாடும் பகை வளர்வதற்குக் காரணம் ஆகிறது. மறப் பண்பே அவள்பால் மிக்கு உள்ளது.

வேட்ட வேந்தனும் வெஞ் சினத்தினனே, கடவன கழிப்பு இவள் தந்தையுஞ் செய்யான்; ஒளிறு முகத்து ஏந்திய வீங்கு தொடி மருப்பின் களிறும் கடிமரம் சேரா சேர்ந்த ஒளிறு வேல் மறவரும் வாய் மூழ்த்தனரே, இயவரும் அறியாப் பல் இயம் கறங்க, அன்னோ, பெரும் பேதுற்றன்று, இவ் அருங் கடி மூதூர், அறன் இலள் மன்ற தானே-விறல் மலை வேங்கை வெற்பின் விரிந்த கோங்கின் முகை வனப்பு ஏந்திய முற்றா இளமுலைத் தகை வளர்த்து எடுத்த நகையொடு, பகை வளர்த்திருந்த இப் பண்பு இல் தாயே.

திணை - காஞ்சி; துறை - மக காஞ்சி

பரன்னர் பாடியது.