பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334

புறநானூறு செய்யுளும் செய்திகளும்


ஊரே மனையோள் பாணர் ஆர்த்தவும், பரிசிலர் ஒம்பவும், ஊன் ஒலி அரவமொடு கைதுவாளே! உயர் மருப்பு யானைப் புகர் முகத்து அணிந்த பொலம் புனை ஒமை .................. ப் பரிசில் பரிசிலர்க்கு ஈய, உரவு வேல் காளையும் கை துவானே.

திணையும் துறையும் அவை, மதுரைத் தமிழக் கூத்தனார் பாடியது.

335. மாங்குடிகிழார்

பூக்கள் என்றால் குரவு, தளவு, குருந்து, முல்லை என்று

இவற்றையே சிறப்பாகக் குறிப்பிடுவர்.

உணவு என்றால் வரகு, தினை, கொள், அவரை இவற்றைத்

தான் சிறப்பாகக் குறிப்பிடுவர்.

பழங்குடியினர் என்றால் துடியன், பாணன், பறையன்,

கடம்பன் என்று இந்நால்வரைத்தான்குறிப்பிடுவர்.

களிறு எறிந்து விழுந்த காளைக்கு எழுப்பப்படும் நடுகல்,

இதுதான் அவர்கள் பரவும் கடவுள் ஆகும்; இதைத் தவிர வழி படுவதற்கு உகந்த கடவுளாக அவர்கள் வேறு எதனையும் ஏற்பது இல்லை; வீரர்கள் வழிபாடுதான் தெய்வ வழிபாடு என்று கொள்பவர் அவர்கள் ஆவார். இதனையே சிறப்பாகக் கொள்வர்.

அடல் அருந் துப்பின் ............. குரவே தளவே குருந்தே முல்லை என்று இந் நான்கு அல்லது பூவும் இல்லை; கருங் கால் வரகே, இருங் கதிர்த் தினையே, சிறு கொடிக் கொள்ளே, பொறி கிளர் அவரையொடு, இந் நான்கு அல்லது உணாவும் இல்லை; துடியன், பாணன், பறையன், கடம்பன், என்று இந் நான்கு அல்லது குடியும் இல்லை; ஒன்னாத் தெவ்வர் முன் நின்று விலங்கி,