பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



களிறு அணைப்பக் கலங்கின, காஅ; தேர் ஓடத் துகள் கெழுமின, தெருவு: மா மறுகலின் மயக்குற்றன, வழி: கலம் கழாஅலின், துறை கலக்குற்றன; தெறல் மறவர் இறை கூர்தலின், பொறை மலிந்து நிலன் நெளிய, வந்தோர் பலரே, வம்ப வேந்தர், பிடி உயிர்ப்பு அன்ன கை கவர் இரும்பின் ஓவு உறழ் இரும் புறம் காவல் கண்ணிக், கருங் கண் கொண்ட நெருங்கல் வெம் முலை, மையல் நோக்கின், தையலை நயந்தோர் அளியர்தாமே இவள் தன்னைமாரே செல்வம் வேண்டார், செருப் புகல் வேண்டி, நிரல் அல்லோர்க்குத் தரலோ இல் எனக் கழிப் பிணிப் பலகையர், கதுவாய் வாளர், குழாஅம் கொண்ட குருதிஅம் புலவொடு கழாஅத் தலையர், கருங் கடை நெடு வேல் இன்ன மறவர்த்து.ஆயினும், அன்னோ! என் ஆவதுகொல் தானேபன்னல் வேலி இப்பணை நல்ஊரே!

திணையும் துறையும் அவை,

அவனை அவர் பாடியது.

346. மகட்பாற் காஞ்சி

தாய் முலைப் பால் அவளுக்குத் திகட்டி விட்டால் வேறு பசும் பால் வள்ளத்தில் ஊட்டி வளர்த்தவள்.

உடன் பிறந்தவன் கல்வி கற்றவன்; அதனால் நன்மை தீமை அறிந்தவன்.

தந்தையும் போரில் வல்லவன்; வீரம் மிக்கவன்.

பாசம் மிக்கவ்ஸ் தாய் அறிவு மிக்கவன் உடன் பிறந்தவன்; வீரம் மிக்கவன் தந்தை.