பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

346

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



என் ஆவதுகொல் தானே? நன்றும் விளங்குறு பராரைய ஆயினும், வேந்தர் வினை நவில் யானை பிணிப்ப, வேர் துளங்கின, நம் ஊருள் மரனே.

திணையும் துறையும் அவை, கபிலர் பாடியது.

348. மகட்பாற் காஞ்சி

உழவர் தண்ணுமை ஒலி கேட்டுத் தேனிக்கள் மேலே கிளம்ப அக்கூட்டிலிருந்து குயவர்கள் சிறுவர்கள் தேன் எடுப்பர். அக்குயவர் சேரியும், சிறு மீன்களைப் பிடித்து உண்ணும் பாண்சேரியும் உள்ள தழும்பன் என்பானின் ஊரைப் போன்று நலன் உடையவள் இவ்வூர் மகள்; இவளை இவள் தாய் பெறாமல் இருந்திருந்தால் இந்த ஊர் இக்கேட்டுக்கு உள்ளாகி இருக்காது.

இவள் பிறந்து வளர்ந்து வனப்புற்று விளங்குவதால் இம் மன்னர்கள் தமக்கு உரிய களிறுகளை இங்குக் கொண்டு வந்து நிறுத்தி உள்ளனர். காவல் மரங்கள் முறிபடுகின்றன. நிழல் இருக்கும் இடம் எல்லாம் தேர்களைக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளனர்.

எல்லாம் இந்த ஊர் மகள் அவள் வனப்பு; வளர்ப்பு: தந்தையின் மறுப்பு.

வெண்ணெல் அரிஞர் தண்ணுமை வெரீஇக்,

கண் மடற்கொண்ட தீம் தேன் இரியக்,

கள் அரிக்கும் குயம், சிறு சில்

மீன் சீவும் பாண் சேரி,

வாய்மொழித் தழும்பன் ஊனுர் அன்ன,

குவளை உண்கண் இவளைத், தாயே

ஈனாளாயினள் ஆயின், ஆனாது

நிழல்தொறும் நெடுந் தேர் நிற்ப, வயின்தொறும்,

செந் நுதல் யானை பிணிப்ப,

வருந்தலமன்-எம் பெருந் துறை மரனே!

திணையும் துறையும் அவை.

பரணர் பாடியது.