பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348

புறநானூறு செய்யுளும் செய்திகளும்


எல்லாம் யாரால் வந்தது? இந்த ஊரில் பிறந்த மகள்; அவள்

பெருவனப்பு; அவள் மார்பில் தோன்றிய சுணங்கு; இதுதான்

இந்தப் போருக்குத் தூண்டுதல் ஆகும். அவள் கண்கள் அவன்

தமையன்மார் ஏந்திய வேல் போன்று கூரியது; சிவந்தது.

தூர்ந்த கிடங்கின், சோர்ந்த ஞாயில், சிதைந்த இஞ்சிக், கதுவாய் மூதூர் யாங்கு ஆவதுகொல் தானே, தாங்காது? படு மழை உருமின் இரங்கு முரசின் கடு மான் வேந்தர் காலை வந்து, எம் நெடு நிலை வாயில் கொட்குவர் மாதோ, பொருதாது அமைகுவர் அல்லர்-போர் உழந்து, அடு முரண் முன்பின் தன்னையர் ஏந்திய வடிவேல் எஃகின் சிவந்த உண்கண், தொடி பிறழ் முன்கை, இளையோள் அணி நல் ஆகத்து அரும்பிய சுணங்கே

திணையும் துறையும் அவை.

மதுரை ஒலைக் கடைக் கண்ணம் புகுந்தாராயத்தானார் பாடியது.

351. மகட்பாற் காஞ்சி

வள்ளன்மை மிக்க எயினன் என்பானின் வாகை என்னும் ஊரைப் போன்ற நலம் உடையவள் இந்தப் பெண்.

இவள் நலம் வேண்டிப் புலம் பெயர்ந்து படை வலிமை மிக்க மன்னர்கள் வந்துள்ளனர். இவள் தந்தை ஒப்புதல் தந்து செப்புதல் செய்யான். மறுப்பு அவன்பால் தோன்றும்.

பொய்கையில் மீன்களை உண்டு பின் மருதமரம் ஏறி அதனை வெறுத்தால் காஞ்சி மரம் ஏறி மகிழ்வுடன் விளங்கும் நாரைகள் உடையது இவ்வூர் அமைதி கொழிக்கும் இவ்வூர் நிம்மதி இழக்க மக்கள் துயர் உழக்க வருந்தப்போகிறது.

படு மணி மருங்கின பணைத் தாள் யானையும், கொடி நுடங்கு மிசைய தேரும், மாவும். படை அமை மறவரொடு, துவன்றிக் கல்லெனக், கடல கணடனன கண அகன தானை

வென்று எறி முரசின் வேந்தர், என்றும்,