பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

349

வண் கை எயினன் வாகை அன்ன இவள் நலம் தாராது அமைகுவர் அல்லர் என் ஆவதுகொல் தானே- தெண் நீர்ப் பொய்கை மேய்ந்த செவ் வரி நாரை தேங் கொள் மருதின் பூஞ் சினை முனையின், காமரு காஞ்சித் துஞ்சும் ஏமம்சால் சிறப்பின், இப் பணை நல் ஊரே?

திணையும் துறையும் அவை,

மதுரைப் படை மங்க மன்னியார் பாடியது.

352. மகட்பாற் காஞ்சி

வள்ளன்மை மிக்க தித்தன் என்பானின் நெல் வளம் மிக்க

உறந்தை போல அணிகலன்களைக் கொண்டு வந்து குவித்துத்

தந்தாலும் இவள்தந்தை கொள்ளான்.

இவளே வேங்கையின் மலர் போலச் சுணங்கினை உடைய

முலையினள். இவள் பேரழகு அப்பெருநில மன்னர்களை மயக்கி அவர்களைத்தூண்டுகிறது.

இவள் தமையனும் விட்டுக் கொடுத்து விலகி நிற்கும்

இயல்பினன் அல்லன் கட்டுக் குலையாத ஆண்மையுடன் போர் ஏற்று எதிர்த்து நிற்பான்.

தேஎம் கொண்ட வெண் மண்டையான், வீங்கு முலை ........................ கறக்குந்து அவல் வகுத்த பசுங் குடையான், புதல் முல்லைப் பூப் பறிக்குந்து, ஆம்பல் வள்ளித் தொடிக் கை மகளிர் குன்று ஏறிப் புனல் வரை பாய்ந்து --------------------- * * * * * * நொடை நறவின் மா வண் தித்தன் வெண்ணெல் வேலி உறந்தை அன்ன உரைசால் நன் கலம் கொடுப்பவும் கொளா அன் நெடுந்தகை இவளே விரிசினைத்துணர்ந்த நாகு இள வேங்கையின்,