பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

355



பேஎய் மகளிர் பிணம் தழுஉப் பற்றி, விளர் ஊன் தின்ற வெம் புலால் மெய்யர், களரி மருங்கின் கால் பெயர்த்து ஆடி, ஈம விளக்கின் வெருவரப் பேரும் காடு முன்னினரே, நாடு கொண்டோரும்; நினக்கும் வருதல் வைகல் அற்றே: வசையும் நிற்கும்; இசையும் நிற்கும்; அதனால், வசை நீக்கி இசை வேண்டியும், நசை வேண்டாது நன்று மொழிந்தும், நிலவுக் கோட்டுப் பல களிற்றொடு, பொலம் படைய மா மயங்கிட இழை கிளர் நெடுந் தேர் இரவலர்க்கு அருகாது, கொள் என விடுவை ஆயின், வெள்ளென, ஆண்டு நீ பெயர்ந்த பின்னும், ஈண்டு நீடு விளங்கும், நீ எய்திய புகழே.

திணை - அது துறை - பெருங்காஞ்சி

அந்துவன் கீரனைக் காவட்டனார் பாடியது.

360. பெருஞ் காஞ்சி

மீதுண் விரும்பார்; சினம் கொள்ளார்; சில சொற்கள் பேசித் தாம் கருதுவதைத் தெளிவாக அறிவுறுத்துவர் சொல்லாற்றல் மிக்கவர்.

கேள்விக்கு மதிப்புத் தருபவர்; பிறர் சொல்லப் பொறுமையாகக் கேட்டுத் தம் அறிவைப் பெருக்கிக் கொள்வர். நுண்ணுணர்வு உடையவர்; பிறர் துன்பம் எளிதில் அறிந்து செயல்படுவர். அதனால் பெருங் கொடையினராக விளங்குவர்.

ஈத்து உவக்கும் இன்பம் அறிந்தவர்; சுவைமிக்க உணவைப் பிறர்க்குத் தந்து மகிழ்விப்பர். பருகக் கள்ளும் பகிர்ந்தளிப்பர். அவர்கள் பேசத் தெரிந்தவர்கள்; பணிந்த மொழியால் கனிந்த சொற்களை வெளியிடுவர். பயனுள்ள செயல்கள் ஆற்றி நயன்மிக்கவராய் விளங்குவர்.

இத்தகைய பண்புகளும் செயலும் மிக்கவர் நன்முறையில் இந் நானிலத்தை ஆண்டுள்ளனர். நற் புகழும் அடைந்தனர்.