பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

354

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



வையமும் தவத்தையும் ஒப்பிட்டு அளவிட்டுப் பார்த்தால் தவத்துக்கு இந்த உலக வாழ்க்கை வெண்சிறு கடுகு அளவும் நிகர் ஆகாது. அதனால் வீட்டைக் காதலிப்பவர் இவ் உலக வாழ்வைக் கைவிட்டனர்.

பற்றுகளை விட்டவரைத் திருமகள் விடாள்; விடாதவரை அவள் துறப்பது உறுதி. உலக வாழ்க்கையில் கிடந்து அவர்கள் உழல்வர்.

பருதி சூழ்ந்த இப் பயம் கெழு மாநிலம் ஒரு பகல் எழுவர் எய்தியற்றே: வையமும் தவமும் தூக்கின், தவத்துக்கு ஐயவி அனைத்தும் ஆற்றாது ஆகலின், கைவிட்டனரே காதலர்; அதனால் விட்டோரை விடாஅள், திருவே: விடாஅதோர் இவள் விடப்பட்டோரே.

திணை - அது துறை - மனையறம் , துறவறம் வான்மீகியார் பாடியது.

359. பெருங் காஞ்சி

கூகை குரல் எழுப்புகிறது; குறுநரி பிணங்களைக் கடித்துத் தின்கின்றது. பேய்கள் பிணங்களைப் பிய்த்துக் தின்கின்றன. இத்தகைய சுடுகாட்டை நாட்டை ஆளும் மன்னரும் அடை கின்றனர். நீ மட்டும் அதற்கு விதி விலக்கு ஆக முடியாது. உனக்கும் அதே கதிதான்.

நிலைப்பவை யாவை? உன்னைச் சுற்றி எழுந்த வசையும் இசையும்தான். அதனால் வசை நீங்க வழிவகை செய்க. ஆசைக்கு உட்பட்டுத் தீமைக்ளுக்கு ஆளாகாதே; நன்மொழி பேசுக; களிறுகளையும் தேர்களையும் பரிசிலர்க்கு நல்கினையாகுக. ஆண்டுகள் பலகழிந்தாலும் புகழ் நீண்டு நிலைத்து நிற்கும். புகழ்பட வாழ்பவரே வாழ்ந்தவர் என்று மதிக்கப்படுவர்.

பாறுபடப் பறைந்த பல் மாறு மருங்கின், வேறு படு குரல வெவ் வாய்க் கூகையொடு, பிணம் தின் குறு நரி நிணம் திகழ் பல்ல,