பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

353



மன்பதைக்கு எல்லாம் தானாய்த், தன்புறம் காண்போர்க்குக் காண்பு அறியாதே.

திணையும் துறையும் அவை,

நாயங் கண்ணனார் பாடியது.

357. மறக்காஞ்சி

மூவேந்தர்க்கும் உரிய நாடுகளைப் பொது என்று இல்லாமல் தனி ஒருவனாக இருந்து ஆண்ட பேரரசர்க்கும் நாள் முடிந்துதான் போகிறது. இறப்பினின்று யாரும் தப்புவது இல்லை. ஈட்டி வைக்கும் செல்வத்துக்கும் அதனைத் தடுத்து நிறுத்தும் ஆற்றல் இல்லை.

விதைக்கும் அறவினை அத்தகையது அன்று; செல்லும் உலகத்துக்கும் அது துணையாக அமைவது. நிலைத்து நிற்பது. அறத்தைக் கைவிட்டவர்க்கு இந்த உலகத்தைவிட்டு மறுமை உலகத்தைக் காண்பது அரிது; கிளையினர் அழுது அலற இவர்கள் உதிர்ந்து அழிவர்.

குன்று தலை மணந்த மலை பிணித்து யாத்த மண், பொதுமை சுட்டிய மூவர் உலகமும், பொதுமை இன்றி ஆண்டிசினோர்க்கும், மாண்ட அன்றே, யாண்டுகள்; துணையே வைத்தது அன்றே வெறுக்கை வித்தும் அறவினை அன்றே விழுத்துணை; அத்துணைப் புணை கைவிட்டோர்க்கு அரிதே, துணை அழத் தொக்கு உயிர் வெளவும்காலை, இக்கரை நின்று இவர்ந்து உக்கரை கொளலே.

திணை - அது துறை மறக்காஞ்சி; பெருங்காஞ்சியும் ஆம். பிரமனார் பாடியது.

358. மனையறமும் துறவறமும்

சூரியன் சூழ்ந்து வரும் இந்த உலகம் ஒரே நாளில் ஏழு அரசர்களையும் காண்கிறது. வாழ்க்கை நிலையற்றது.

23