பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

352

புறநானூறு செய்யுளும் செய்திகளும்


355. மகட்பாற் காஞ்சி

இந்த ஊர்மதில் ஞாயில் இன்றிக் கிடக்கிறது. அகழி நீர் இன்றிக் கிடக்கிறது. அங்குக்கன்றுகள் மேய்ந்து திரிகின்றன.

ஊரது நிலைமை இது; இதனை எண்ணிப் பார்க்காமல் மகளது தந்தை மறப் பண்பில் அறிவு மயங்கிக் கிடக்கிறான். போரை ஏற்கிறான். இந்த ஊர் என்ன ஆகும்? அழிவுக்கு வழி கோலியுள்ளான். அவள் தமையன்மாரும் வீறிட்டு எழுவர்.

மதிலும் ஞாயில் இன்றே; கிடங்கும், நீஇர் இன்மையின், கன்று மேய்ந்து உகளும்; ஊரது நிலைமையும் இதுவே மற்றே எண்ணா மையலன் தந்தை தன்னையர் கண்ணார் கண்ணிக் கடுமான் கிள்ளி

திணையும் துறையும் அவை,

356.பெருங்காஞ்சி

கள்ளிச் செடி மிக்க களர் நிலம் இது; இந்தச் சுடுகாட்டில் பகலிலும் கூகை குழறுகிறது. ஈம விளக்கின் ஒளியில் பேய்கள் கூத்து ஆடுகின்றன. புகை தவழும் சுடுகாடு இது.

காதல் நெஞ்சு உடையவர் ஒவுதல் இன்றி அழுத கண்ணிர் சுட்ட சாம்பலைத் தணிவிக்கும்; இந்தச் சுடுகாடு பலர் முதுகைத் தான் கண்டு உள்ளது.

இது யாருக்கும் எப்பொழுதும் தோற்றுப் புறமுதுகு இட்டது இல்லை. மானுடர்க்கு எல்லாம் முடிவிடமாக இது விளங்குகிறது.

களரி பரந்து, கள்ளி போகிப், பகலும் கூஉம் கூகையொடு, பிறழ்பல், ஈம விளக்கின், பேஎய் மகளிரொடு அஞ்சு வந்தன்று, இம் மஞ்சுபடு முதுகாடு; நெஞ்சு அமர் காதலர் அழுத கண்ணி என்பு படு சுடலை வெண்நீறு அவிப்ப, எல்லார் புறனும் தான் கண்டு, உலகத்து