பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

351



கதுவாய் போகிய துதி வாய் எஃகமொடு, பஞ்சியும் களையாப் புண்ணர், அஞ்சுதகவு உடையர், இவள் தன்னைமாரே.

திணையும் துறையும் அவை.

காவிரிப் பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது.

354 மகட்பாற் காஞ்சி

பெருநில வேந்தர் எதிர்க்கவும் அடங்காது போர் செய்யும் ஊர்த்தலைவன். தன் வேலினை நீரில் குளிப்பாட்டி வழிபாடு செய்வதற்கு முனைந்தான். வீரர்கள் ஒன்று திரண்டனர். போர் மூளப்போகிறது.

இனி இந்த ஊர் அமைதி இழக்கப் போகிறது. கயல் மீனை உண்ணும் நாரை வாளையைத் துரத்த அது அங்கு நீரில் விளையாடிக் கொண்டிருந்த இளம் பெண்கள் கண்ணில்பட அவர்கள் அவற்றைப் பிடித்துச் சென்று தம் வளமனைக்குக் கொண்டு சேர்ப்பர். இத்தகைய வளம்மிக்க ஊர் தன் அழகை இழக்கப் போகிறது.

காரணம் தேமல் படர்ந்த முலையள்; மூங்கில் போன்ற தோளினள். பிணைமான் கண்ணள்; அவளுடைய மான் பிணை அன்ன மதர்த்த நோக்கு; இவ் அழிபாதைக்குக் கொண்டு சென்று விட்டது.

அரைசு தலைவரினும் அடங்கல் ஆனா நிரை காழ் எஃகம் நீரின் மூழ்கப் புரையோர் சேர்ந்தெனத் தந்தையும், பெயர்க்கும்; வயல் அமர் கழனி வாயிற் பொய்கைக், கயல் ஆர் நாரை உகைத்த வாளை புனலாடு மகளிர் வள மனை ஒய்யும் ஊர் கவின் இழப்பவும் வருவது கொல்லோ - சுணங்கு அணிந்து எழிலிய அணந்து ஏந்து இள முலை. வீங்கு இறைப் பணைத்தோள், மடந்தை மான் பிணை அன்ன மகிழ் மடநோக்கே?

திணையும் துறையும் அவை, பரணர் பாடியது.