பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

357



361. பெருஞ் காஞ்சி

உயிர்களைக் கவ்வும் கூற்றமே உன் வருகைக்கு இவன் அஞ்சு வது இல்லை. சாவைக் கண்டு இவன் கலங்கப் போவது இல்லை.

அறநெறி தவறாது வாழ்பவன். அவனுக்கு இறப்புக் கண்டு அஞ்சத் தேவை இல்லை. சிறக்க அவன் உயர்வு அடைவது உறுதி.

கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்களுக்குப் பொன் கலன் அணிகளை நீர் வார்த்துத் தந்திருக்கிறான்.

தன்னைப் பாடுவோர்க்கு தாயினும் அன்பினன் யானையும் குதிரையும் பல தந்திருக் கிறான். புலவர்களுக்குத் தேர்கள் தந்துள்ளான். பாடினிக்குப் பொன்மாலை, பாணனுக்குப் பொற்றாமரை தந்துள்ளான். மனை யுறை கற்பினள் அவளோடு இனிது வாழ்ந் தவன். மகளிர் பொற் கலத்தில் தேறல் தரப் பருகி மகிழ்ந்தவன். அவன் மகிழ்விலும் அறத்தை இகழ்வு செய்தது இல்லை. அவனுக்கு அறத்தைப் பற்றி அறிவிக்கத் தேவை இல்லை.

கார் எதிர் உருமின் உரறிக், கல்லென, ஆர் உயிர்க்கு அலமரும் ஆராக் கூற்றம்! நின் வரவு அஞ்சலன் மாதோ, நன் பல கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு, அருங் கலம் நீரொடு சிதறிப், பெருந்தகைத் தாயின் நன்று பலர்க்கு ஈத்துத் தெருள் நடை மா களிறொடு தன் அருள் பாடுநர்க்கு நன்கு அருளியும், உருள் நடைப் பல்தேர் ஒன்னார் கொன்றதன் தாள் சேருநர்க்கு இனிது ஈத்தும், புரிமாலையர் பாடினிக்குப் பொலந் தாமரைப் பூம் பாணரொடு கலந்து அளைஇய நீள் இருக்கையால் பொறையொடும் மலிந்து கற்பின் மான் நோக்கின், வில் என விலங்கிய புருவத்து, வல்லென நல்கின் நா அஞ்சும் முள் எயிற்று, மகளிர் அல்குல் தாங்கா அசைஇ, மெல்லெனக் கலங்கலம் தேறல் பொலங்கலத்து ஏந்தி,