பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



அமிழ்து என மடுப்ப மாந்தி, இகழ்விலன், நில்லா உலகத்து நிலையாமை நீ சொல்ல வேண்டா தோன்றல் முந்தறிந்த முழுது உணர் கேள்வியன் ஆகலின்


விரகினானே.

கயமனார் பாடியது.

362. பெருங் காஞ்சி

போர் செய்யும் வீரர்கள் ஆரவாரம்; அவர்கள் எழுப்பும் வெற்றிக் கொடி கூற்றுவனைப்போல் மாற்றாரை இவன் சென்று வீழ்த்துதல் இவை எல்லாம் ஏன்? கடும் போரினை இவன் ஆற்றுவது ஏன்?

இதற்கு விடை அந்தணாளர் அறிவிக்கும் அருளறத்தில் காணமுடியாது. அருள் காரணமாக யாரும் போர் தொடுப்பதில்லை.

அறநூல்கள் ஒழுக்கத்தை அறிவிக்கின்றன. இவ்வீர விளையாட்டு ஒழுக்க நூலில் பேசப்படுவது இல்லை; மாற்றாரைக் கொல்வது மறம் ஆகுமேயன்றி அது அறம் ஆகாது; அறத்துப் பாலிலும் இதற்கு இடமில்லை.

பின் இது எங்கே பேசப்படுகிறது? பொருட்பாலைச் சார்ந்தது; சாதனைகள் இவற்றின் செயற்பாடுகள்; போர் என்றால் பொருள் கிடைக்கிறது. அது கொண்டு பசித்தவர்க்கு உணவு தரமுடிகிறது. அந்தணர்க்குக் கொடை வழங்கப்படுகிறது. பரிசிலர்க்குப் பொருள் வழங்கப்படுகிறது.

இதுவே போர் செய்வதன் பொருள் ஆகும். பிறரை வாழ வைக்கவே போர்களை மேற்கொள்கின்றனர்.

அதுமட்டுமன்று உயிர் மீது பற்று இல்லாமல் எப்பொழுதும். தம்மை இழக்கத் துணிகின்றான். வீர மரணம் அவன் குறிக்கோள் சுற்றத்தார் இடுகாட்டில் அழுது பின் தம் வீடு திரும்புவதற்கு அன்று. வான் புகழ் அடைதல் அவன் நோக்கம்; துறக்க வாழ்வு அவன் எட்டிப் பிடிப்பது.