பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

359


வாழ்க்கை அதற்குப் பொருள் உண்டு. ஈதல் இசைபட வாழ்தல் இதுவே உயிர்க்கு ஊதியம் ஆகும்.

ஞாயிற்று அன்ன ஆய் மணி மிடைந்த மதி உறழ் ஆரம் மார்பில் புரளப், பலி வெறு முரசம் பாசறைச் சிலைப்பப், பொழிலகம் பரந்த பெருஞ்செய் ஆடவர் செருப் புகன் றெடுக்கும் விசய வெண் கொடி அணங்கு உருத்தன்ன கணம் கொள் தானை, கூற்றத்து அன்ன மாற்று அரு முன்பின், தாக் குரல் கேண்மின் அந்தணாளிர் நான்மறைக் குறித்தன்று அருள் ஆகாமையின் அறம் குறித்தன்று பொருள் ஆகுதலின் மருள் தீர்ந்து, மயக்கு ஓரிஇக், கை பெய்த நீர் கடற் பரப்ப, ஆம் இருந்த அடை நல்கிச், சோறு கொடுத்து, மிகப் பெரிதும் வீறு சால் நன்கலமே வீசி நன்றும் சிறு வெள் என்பின் நெடு வெண் களரின், வாய் வன் காக்கை கூகையொடு கூடிப் பகலும் கூவும் அகலுள் ஆங்கண், காடு கண் மறைத்த கல்லென் சுற்றமொடு, இல் என்று இல்வயின் பெயர, மெல்ல இடம் சிறிது ஒதுங்கல் அஞ்சி, உடம்பொடும் சென்மார், உயர்ந்தோர் நாட்டே. திணை - பொதுவியல்; துறை - பெருங்காஞ்சி. அவனைச் சிறுவெண்டேரையனர் பாடியது.

363. பெருங் காஞ்சி

கடல் சூழ்ந்த இவ்வுலகத்தைத் தானே முழுதும் ஆண்டவர்கள் முடிவில் மாண்டு ஒழிகின்றனர். அவர்கள்தம் ஆட்சியை யாரோமுன் பின் அறியாதவர்க்குத் தந்து சுடுகாட்டில் சென்று ஒய்வு கொள்கின்றனர். வாழ்க்கை முடிவு.அதுதான்.

அதனால் நீயும் யான் கூறுவதைச் சற்றுச் செவி கொடுத்துக்

கேட்டாயாக.