பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

360

புறநானூறு செய்யுளும் செய்திகளும்


உடம்பொடு நிலைத்து நின்ற உயிர் யாண்டும் இல்லை; அது மறைவது உறுதி.

இந்தச் சுடுகாடு உனக்குத் தரும் மரியாதை யாது? மதிப்பு யாது?

கள்ளிச் செடிமிக்க முள்நிறைந்தது. வெட்ட வெளியில் உன்னை நீட்டி வைக்கின்றனர். உப்பில்லாத சோற்றுப் புழுக்கல் அதனைக் கைக் கொண்டு பின்புறம் திரும்பிப் பார்க்காமல் இழிபிறப்பினன் தரையே பாத்திரமாக அமையப் பலிச்சோறு எனத் தருகிறான். அதனை உனக்குப் படைக்கின்றான். இத்தகைய கசந்த நாள் வருவதற்கு முன் நீ நினைத்து நல்வாழ்வைத் தேடிக் கொள்க. கடல் சூழ்ந்த நில உலகத்தை முற்றிலும் துறந்து தூய துறவினை மேற்கொள்க; உன்னை எந்த இழிவும் தாழ்வும் பற்றா உயர் உலகம் உனக்காகக் காத்திருக்கிறது.

இருங் கடல் உடுத்த இப் பெருங் கண் மாநிலம் உடையிலை நடுவணது இடை பிறர்க்கு இன்றி, தாமே ஆண்ட ஏமங் காவலர் - இடு திரை மணலினும் பலரே சுடு பிணக் காடு பதி ஆகிப் போகித் தம்தம் நாடு பிறர் கொளச் சென்று மாய்ந்தனரே, அதனால், நீயும் கேண்மதி அத்தை வீயாது உடம்பொடு நின்ற உயிரும் இல்லை; மடங்கல் உண்மை மாயமோ அன்றே: கள்ளி வேய்ந்த முள்ளிஅம் புறங்காட்டு, வெள்ளியல் போகிய வியலுள் ஆங்கண், உப்பு இலாஅ அவிப் புழுக்கல் கைக்கொண்டு, பிறக்கு நோக்காது. இழி பிறப்பினோன் ஈயப் பெற்று, நிலம் கலனாக, இலங்கு பலி மிசையும் இன்னா வைகல் வாராமுன்னே, செய் நீ முன்னிய வினையே, முந்நீர் வரைப்பகம் முழுது உடன் துறந்தே.

திணையும் துறையும் அவை,


ஐயாதிச் சிறுவெண்டேரையார் பாடியது.